உணர்ச்சி பொங்கிய பா.ரஞ்சித்… செம்ம கலாய் கலைத்த ப்ளூ சட்டை மாறன்…

0
Follow on Google News

இயக்குனர் பா ரஞ்சித் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது, தீண்டாமை டீ கிளாஸ் இல் இருந்து பேப்பர் கப்க்கு மாறி இருப்பதாக கூறிய விவகாரம் குறித்து சோசியல் மீடியாவில் விவாதித்து வருகின்றனர். அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து இவர் எடுத்த மெட்ராஸ் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

மெட்ராஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து கபாலி படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கம் வாய்ப்பை பெற்றார். பா ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தை பார்த்து அசந்து போன ரஜினிகாந்த்வும் கபாலி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கபாலி படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. கபாலி படத்துக்கு கிடைத்த வரவேற்பு அடுத்ததாக மீண்டும் சூப்பர் ஸ்டாரை வைத்து காலா படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.

அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைக் கண்டார்.சார்பட்டா பரம்பரை வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.அதன் பிறகு நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். ஆனால், பா ரஞ்சித் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை.

இவ்வாறு அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் உற்சாகப்படுத்திய பா. ரஞ்சித், நடிகர் விக்ரமை வைத்து எடுத்துள்ள தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சியான் விக்ரம் பா ரஞ்சித் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தங்களான் கடும் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில், ரஞ்சித் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.

அந்த பேட்டியில் பேசிய பா.ரஞ்சித், தீண்டாமை வேறு வடிவமாக மாறி இருக்கிறது என்றும், இப்போது டீ கிளாசில் இருந்து பேப்பர் கப்புக்கு தீண்டாமை மாறிவிட்டது என்றும் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே இயக்குனர் மாரி செல்வராஜ் அவர் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் குடிக்கும் டீ டம்ளரில் கூட சாதிய பாகுபாடு இருப்பதை காட்டி பலரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

இந்நிலையில், பேப்பர் கப்பம் தீண்டாமையை வெளிப்பாடுதான் என்று ரஞ்சித் பேசியிருப்பது விவாத பொருளாக மாறி உள்ளது.இது குறித்து ரஞ்சித் கூறியதாவது: “தீண்டாமை இப்ப நவீனமா மாறிடுச்சு. தனித்தனி டி கிளாஸ்ல இருந்த தீண்டாமை இப்போ பேப்பர் கப்புக்கு மாறிடுச்சு. அதை குடிச்சிட்டு அப்படியே தூக்கி போட்டுடலாம்.வேற யாரும் அதுல குடிக்க வேண்டியது இல்லை. இப்படி தீண்டாமை வேற வடிவமா மாறிடுச்சு.” என்று பேசியிருக்கிறார்.

ரஞ்சித்தின் இந்த கருத்தை கலாய்க்கும் வகையில் X தளத்தில் ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நீங்கள் டீ குடிக்கும் கடைகளில் உங்கள் விருப்பப்படி கண்ணாடி தமிழரின் அல்லது பேப்பர் கப்பில் தருகிறார்களா? இல்லை ஜாதி பார்த்து தருகிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் கேள்விக்கு ஏராளமான இணையவாசிகள் பதில் அளித்து வருகின்றனர். பெரும்பாலான நெட்டிசன்கள், இந்த மாரி செல்வராஜுக்கும் பா.ரஞ்சித்துக்கும் இதே தான் வேலை. எப்ப பார்த்தாலும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோம் என்று பேசுவார்கள். ரஞ்சித் கூறுவது போல் எல்லாம் டீக்கடைகளில் செய்வதில்லை என பா.ரஞ்சித்துக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.