RRR படத்திற்கு ஆஸ்கர் கிடைக்காதற்கான சூழ்ச்சி அம்பலம்… ஆங்கிலேயர்களுக்கு ஏன் இந்த கோபம் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மிக பெரிய வெற்றியை பெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கும் மட்டும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது, அதே நேரத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்காததற்கான வெள்ளையர்களின் சூழ்ச்சி குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது,ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில், மரகதமணி இசையமைப்பில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஏற்கனவே இதே பாடலுக்கும் கோல்டன் குளோப் போன்ற சர்வதேச விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றது.

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் சில திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்படும், அந்த வகையில் மிக பெரிய வெற்றியை பெற்று இந்தியா முழுவதும் கொண்டாட பட்ட திரைப்படமான ஆர்.ஆர்.ஆர். திடப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்படவில்லை. இது இந்திய சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் பரிந்துரை செய்யவில்லை என்றாலும் கூட, ஆர்.ஆர்.ஆர். பட குழுவினர் ஏஜென்ட் மூலமாக நேரடியாக ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பித்தனர்.மேலும் இந்தியாவில் மிக பெரிய வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை அப்படத்தின் குழுவினர் ஏற்பாட்டில் ஆங்கில மொழியில் அமெரிக்காவில் பல இடங்களில் திரையிட்டனர். இந்த படம் திரையிடப்பட்ட ஆரம்ப கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக ரீச் ஆகவில்லை என்றாலும் கூட.

ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்பட்ட ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை ஹாலிவூட் நடிகர்கள் மற்றும் அமெரிக்க ஊடகங்கள் வெகுவாக பாராட்டியது, இது ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு அமெரிக்காவில் ப்ரோமோஷனாக அமைத்தது. இதனை தொடர்ந்து அமெரிக்கர்கள் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் குவிய தொடங்கியதை தொடர்ந்து. இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது உறுதியாக கிடைக்கும் என எதிர்பார்க்க பட்டது.

குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இரவு பார்ட்டிகள், பார், பப் போன்ற கேளிக்கை இடங்களில் நாட்டு நாட்டு பாடல் ஒலிக்க தொடங்கியது. உலக சினிமா வரலாற்றில் அமெரிக்கர்கள் ஒரு இந்திய சினிமா பாடலை கொண்டாடுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் கதை ஆங்கிலயேர்களுக்கு இந்தியர்களுக்கு இடையில் நடக்கும் சுதந்திர போராட்டதின் கதை.

இந்த படம் ஆங்கிலேயருக்கு எதிராக உள்ளதால், ஆஸ்கர் விருது வழங்கும் ஜூரி குழுவினர் ஆங்கிலேயர் என்பதால், குறிப்பாக ஆங்கிலயேர்களுக்கு எதிராக உள்ள படங்கள் நன்றாக இருந்தாலும் கூட, நமக்கு எதிராக ஒருவன் படம் எடுத்துள்ளான், அந்த படத்திற்கு நாமே விருது கொடுப்பதா.? என்று அப்படியான படத்தை ஆஸ்கர் விருது வழங்கும் ஜுரி குழு நிராகரித்து விடுவது வழக்கம், அந்த வகையில் ஆர்.ஆர்.ஆர். படம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மக்களின் பேராதரவு பெற்று விட்ட ஆர்.ஆர்..ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு மட்டும் சில தவிர்க்க முடியாத சூழலால், ஆஸ்கர் விருது வழங்கும் ஜுரி குழு தேர்வு செய்துள்ளது. இதில் ஆஸ்கர் விருதை வென்றுள்ள நாட்டு பாடல் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் பணியாற்றாத ஒரு இந்திய திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது, என்பது, படத்தில் இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட ஆர்.ஆர்.ஆர் படக் குழுவினருக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.