பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர். ஹிந்தி தமிழ் போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார். தாம் தூம் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். மணிகர்ணிகா (தி குயின் ஆப் ஜஹன்சி) என்ற வரலாற்று திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் கொடுத்தது.
தமிழில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பெயர் போனவர் தான் இந்த கங்கனா. சமீப காலமாகவே இவர் சர்ச்சைக்கு பெயர் போய் சிக்கிக் கொள்கிறார். சில காலம் முன்பு மகாராஷ்டிரா மாநிலம் தலைநகரமான மும்பையில் காலிஸ்தான் ஆட்சி நடக்கிறது என்று ஒரு கருத்தை தெரிவித்தார். இந்தக் கருத்தை மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் உடன் மோதும் அளவிற்குச் சென்றது.
அவர் சொந்த ஊரான இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து மும்பை வர பல எதிர்ப்புகள் வந்தது ஆனால் மத்திய அரசு முகமும் பாதுகாப்புடன் துணிச்சலுடன் மும்பையில் நுழைந்தார் இதற்காக இவர் வீட்டை ஆக்ரமிப்பு காரணம் காட்டி மாநகராட்சி ஒரு பகுதியை இடித்து விட்டனர். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது வீடு இடிப்பதற்கு தடை போட்டது. பிரச்சனை முடிவுக்கு வந்தது.
டெல்லியில் நடைபெற்ற விவசாய போராட்டத்திற்கு எதிராகவும் இவரின் கருத்து சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. அதற்கப்புறம் சர்ச்சை கருத்துகளும் இடம் பெற்றுள்ளார் நடிகை கங்கனா. தற்போது காப்புரிமை மீறல் காரணத்தைக் காட்டி இவர் மீதும் என் தந்தை மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் சிலர் கங்கனாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.