நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் -அக்சாய திருமணம் மிக பிரமாண்டமாக ஜப்பானில் நடைபெற்று வருகிறது. பல கோடி செலவில் கோலாகலமாக நடைபெற்று வரும் இந்த திருமணத்தில் சினிமா துறையை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். ஏற்கனவே அமெரிக்காவில் நெபோலியன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட சினிமா நட்சத்திரங்கள் அவருடைய மகன் தனுஷ் உடன் நெருங்கி பழகியவர்.
அதனால் ஏற்கனவே நெபோலியன் மகன் தனுஷ்க்கு பரிச்சயமானவர்கள் தான் என்பதால், அவர்களுடன் கலகல வென பேசி மகிழ்ந்து வருகிறார் புது மாப்பிள்ளை தனுஷ். இந்நிலையில் நெபோலியன் மகன் தனுஷ் குறித்து பல தகவல் வெளியாகியுள்ளது, அதில் நெப்போலியன் மகன் தனுஷ் சிறுவயதில் இருக்கும் போதே, இவர் 10 வயது வரை தான் உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் தெரிவிக்க, தன்னுடைய மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என, திருநெல்வேலி அருகே மயோபதி மருத்துவ சிகிச்சையை மகனுக்கு அளித்து தசைவளக் குறைபாட்டு நோயில் இருந்து ஓரளவு குணப்படுத்தி, நீண்ட நாட்கள் மகன் வாழ்வதற்கு நெபோலியன் ஏற்பாடு செய்தார்.
மயோபதி மருத்துவ சிகிச்சையும் தனுஷின் தசைவளக் குறைபாட்டு நோய்க்கு பலனை கொடுத்தது. மேலும் மூத்த மகனான தனுஷ் நோயால் பாதிக்கப்பட்டது போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் திருநெல்வேலி அருகே மயோபதி மருந்துவமனையை விரிவு படுத்த பல உதவிகள் செய்து இருக்கிறார் நடிகர் நெபோலியன்.
இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி மகனுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நெப்போலியன் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்நிலையில் சென்னையில் தொழில் தொடங்க திட்டமிட்ட நெப்போலியன், தனது மகன் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கும் சூழல் ஏற்படவும் தனது தொழிலை அமெரிக்காவில் தொடங்கினர்.
மேலும் தசைவளக் குறைபாட்டு நோயால் அமெரிக்காவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நெபோலியன் மூத்த மகன் தனுஷ் அமெரிக்காவில் அனிமேஷன் படித்து முடித்துள்ளார் என்றும் கூற படுகிறது. இந்நிலையில் தற்பொழுது அக்ஷய என்கிற பெண்ணுக்கும் தனுசுக்கும் ஜப்பானில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் ஒரு சிலர் எல்லை மீறி இந்த திருமணத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மயோபதி மருத்துவமனை டாக்டர் டேனியல் என்பவர் பேட்டி ஒன்றில் நெப்போலியனின் மகன் திருமணம் குறித்து பேசுகையில். தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்களால் திருமணம் செய்து மண வாழ்கையில் ஈடுபட முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் தனுஷை அதிகளவில் பாதிப்பு அடைய செய்யும் வார்த்தைகளாகத்தான் இருக்கிறது. தனுஷ் மட்டுமல்லாமல் இதுபோல தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது வருத்தத்தை ஏற்படுத்தும்.
அதனால் தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாராலும் திருமணம் செய்ய முடியாது என்று ஒட்டுமொத்தமாக கூற முடியாது. நோயின் தாக்கத்தினை பொறுத்து தான் அவர்களால் திருமணம் செய்ய முடியுமா? முடியாதா? என்று சொல்ல முடியும். இந்த நோய் பாதிப்பு அடைந்த பலர் 60 வரை வயது வரைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.