வேற லெவல் ரொமான்ஸ் … நெப்போலியன் மகன் தனுஷ் – அக்ஷயா தம்பதியினரின் ரொமான்ஸ்…

0
Follow on Google News

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் அண்மையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிக கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. தனுசுக்கு டோக்கியாக செல்ல வேண்டும் என்கின்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை நெப்போலியன் குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அவருக்கு பெண்ணும் கிடைத்தது, இரண்டும் ஒரே நேரத்தில் அமைகிறது.

தனுஷின் ஜப்பான் பயணத்தை கேன்சல் செய்துவிட்டு கல்யாண வேலையை கவனிக்கலாம் என்று தனுஷிடம் கேட்டிருக்கின்றனர் நெப்போலியன் மற்றும் அவருடைய மனைவி. ஆனால் இதற்கு தனுஷ் இந்த ட்ரிப்புக்காக கிட்டத்தட்ட எட்டு வருடம் காத்திருந்தேன், அதனால் இந்த ட்ரிப்பு முக்கியம் கல்யாணமும் முக்கியம் இந்த கல்யாணத்தை ஜப்பானில் நடத்தலாம் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்ததை அப்படியே நிறைவேற்றி இருக்கிறார் அவருடைய தந்தை நெப்போலியன்.

இந்நிலையில் முதலில் நெப்போலியன் மாமனார் தனுஷிற்கு ஒரு பெண் பார்த்து இருக்கிறேன், தனுஷை பற்றி எல்லாம் தெரிந்த அந்த பெண் ஓகே சொல்லி இருக்கிறார் என்று அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியனுக்கு தமிழ்நாட்டில் இருந்து தகவலை தெரிவித்து இருக்கிறார் நெப்போலியன் மாமனார். ஆனால் நெப்போலியனுக்கு இதில் பெரிதாக நம்பிக்கை இல்லை, இருந்தும் தன்னுடைய அண்ணனை நேரடியாக சென்று அக்ஷயா குடும்பத்தை பார்க்க சொல்லி இருக்கிறார்.

இதன் பின்பு அக்ஷயா மற்றும் அவருடைய குடும்பத்தினர் முழுமையான சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நெப்போலியன் அவருடைய மனைவியும் நேரடியாக சென்று அக்ஷயாவிடம் பேசி இருக்கிறார்கள், அப்போது நீ விரும்பி தானே இந்த கல்யாணத்தை ஒத்துக் கொண்ட, உன்னை யாராவது திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினார்களா என்று பல கேள்விகளை நெப்போலியன் மருமகள் அக்ஷயாவிடம் திருமணம் முடிவு செய்வதற்கு முன்பே கேட்டிருக்கிறார்.

அதற்கு அக்ஷயா நான் உங்கள் மகன் தனுஷ் குறித்து பல வீடியோக்களை பார்த்திருக்கிறேன். தனுஷ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் தான் இந்த கல்யாணத்தை ஒத்துக் கொள்கிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்தவர் மேலும் நெப்போலியன் மாமனார் இந்த பெண் சிறு வயதிலிருந்து அவருக்கு நன்கு தெரிந்தவர் என்பதால் இந்த பெண் நம் குடும்பத்திற்கு சரியாக இருப்பார் என்று தெரிவித்திருக்கிறார். இதன் பின்பு திருமண இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு தனுஷும், அக்‌ஷயாவும் திருமணத்திற்கு பின்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சுகாசினி இருவரிடம கேள்வி கேட்கிறார். அப்போது பேசிய அக்‌ஷயா, ‘மே மாதம் 16ஆம் தேதி இவர் எனக்கு ஈமெயில் அனுப்பியிருந்தார். அதில் தன்னுடைய காதலை தெரிவித்திருந்தார். அந்த மெயில் வந்த இரண்டாவது நாளே நான் இவரது காதலை ஒத்துக்கொண்டுவிட்டேன். அதுதான் எனக்கு வந்த முதல் ப்ரோபோசல் என அக்ஷயா தெரிவித்தார்.

அப்போது இடைமறித்த சுஹாசினி இரண்டு பேரும் ஏதேனும் ஒரு சினிமா பாட்டை ஒருவருக்கொருவர் Dedicate செய்திருக்கிறீர்களா’ என்று கேட்க, அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த தனுஷ், ‘அதெல்லாம் Coming Soon’ என்றார். மேலும் தனுஷை நான் பேபி என்றுதான் அழைப்பேன். அப்படித்தான் நாங்கள் பேச ஆரம்பித்தபோதே அழைக்க தொடங்கிவிட்டேன் என்றார் அக்‌ஷயா. இப்படி இருவரின் ரொமான்ஸ் பேட்டி வேற லெவெலில் இருந்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here