அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த யுவன் சங்கர் ராஜா… வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவதில்..

0
Follow on Google News

யுவன் சங்கர் ராஜா, தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை தராமல், இரவோடு இரவாக வீட்டை காலி செய்து எஸ்கேப்பாக பார்க்கிறார் என வீட்டு ஓனர் ஒரு பக்கம் கம்ப்ளைன்ட் கொடுக்க, அதற்கு யுவன் சங்கர் ராஜா வீட்டு ஓனர் மீதே கேஸ் போட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் அமைந்துள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறார்.

அவர் வசித்து வந்த அந்த வீடானது அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானது. இந்நிலையில் தான் அஜ்மத் பேகத்தின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் யுவன் சங்கர் ராஜா மீது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த புகாரில், கடந்த 2 ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது. இந்த வீட்டுக்கு யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும்போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா மறுத்து பேசி வந்துள்ளார். நான் வாடகை பணம் கேட்க போன் செய்தேபோதும் அவர் செல்போனை எடுக்கவில்லை.

தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு, இரவோடு இரவாக காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வெளியே எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதனால் புகார் தொடர்பாக விசாரித்து, யுவன் சங்கராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்நிலையில் தான் இதனைப் பார்த்த யுவன்சங்கர் ராஜா, நானும் இளையராஜாவின் மகன் தான் என்பதை நிரூபித்துள்ளார். அதாவது இளையராஜா எப்படி தனக்கு எதிராக யாராவது எதாவது செய்தால் உடனே வழக்கு போட்டு விடுவாரோ, அதேபோல் தான் தற்போது யுவன் சங்கர் ராஜாவும் அந்த வீட்டு ஓனர் மீதே வழக்கு போட்டு இருக்கிறார். இதைப் பார்த்த பலரும் அப்பாவிற்கு ஏற்ப தப்பாமல் பிறந்த மகன் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

அதாவது, தன்னை பற்றிய அவதூறு பரப்பியதாக வீட்டின் உரிமையாளர் ஜமீலாவுக்கு, யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், பல ஆண்டுகளாக பிரபலமான இசையமைப்பாளராக அறியப்படும் தன்னைப் பற்றி அவதூறாக தொலைகாட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் ஜமீலா அளித்துள்ள பேட்டி தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் இதனை பார்த்த பலரும் நீங்கள் வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்ததற்கு, வீட்டு ஓனர் மேலேயே கேஸ் போட்டதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வாடகை பாக்கி 20 லட்சம் கொடுக்காமல், அவர்களை உங்களுக்கே 5 கோடி மான நஷ்ட ஈடாக தரச் சொல்லி வழக்கு போட்டு இருக்கிறீர்களே இது நியாயமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.