தந்தை இளையராஜாவை அவமரியாதை செய்த யுவன் சங்கர் ராஜா.! என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

தனது இசையால் தமிழ் திரையுலகை கட்டி போட்ட இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டு ஆண் பிள்ளையும் ஒரு பெண் பிள்ளையும் உண்டு இதில் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இருவரும் இசையமைப்பாளராக உள்ளனர். மகள் பவதாரணி பின்னணி பாடகர், கார்த்திக் ராஜா தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் திரை துறையில் ஜொலிக்கவில்லை, ஆனால் யுவன் சங்கர் ராஜா தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தற்பொழுது யுவன் சங்கர் ராஜாவுக்கு மார்க்கெட் இல்லை என்றாலும் 2000 முதல் 2015 வரை பல ஹிட் பாடல்களை கொடுத்தவர், இவருடைய வெற்றிக்கு முக்கிய காரணம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் முக்கிய காரணம், நா.முத்துகுமார் மறைவுக்கு பின்பு யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் ஏதும் சொல்வது போன்று இல்லை. யுவன் ஷங்கர் ராஜா 2005ம் ஆனது லண்டனை சேர்ந்த பின்னனி பாடகி ஒருவரை திருமணம் செய்து அடுத்த இரண்டு வருடத்தில் விவாகரத்து செய்தார்.

இதன் பின்பு 2011ம் ஆண்டு ஷில்பா என்கிற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட யுவன் சங்கர் ராஜா அந்த பெண்ணையும் விவாகரத்து செய்துகொண்டார். இதன் பின்பு 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு தன்னை மாற்றி கொண்ட யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இவர் மதம் மாறியதற்கு அவருடைய தந்தை இளையராஜாவுக்கு சிறிதும் விருப்பம் இல்லை என்று கூறப்பட்டது.

இருந்தும் தந்தை மகன் இருவருக்கும் சமரசம் ஏற்பட பல மேடைகளில் ஒன்றாக இருவரும் காட்சியளித்தனர். இருந்தும் தந்தை – மகன் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளையராஜாவுக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததையொட்டி, சதாபிஷேகம் நடைபெற்றது, இதற்கான ஏற்பாடுகள் மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோவிலில் கடந்த 30ம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இளையராஜா குடும்பத்தை சேர்ந்த மகன் கஸ்தூரி ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரேம்ஜி அமரன், மற்றும் இயக்குனர் பாரதி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள குடும்பத்தினர் வற்புறுத்தியும் தந்தையின் ஆயுள் நீடிக்க நடைபெற்ற சதாபிஷேகம் நிகழ்வில் மகன் யுவன் சங்கர் ராஜா கலந்து கொள்ளவில்லை.

இஸ்லாம் மதத்தை ஏற்று கொண்ட யுவன் சங்கர் ராஜா, கோவிலில் நடைபெறும் சதாபிஷேகம் நிகழ்வில் கலந்து கொள்வது அவர் ஏற்று கொண்ட மதத்திற்கு சரியானது இல்லை என்பதால் இந்த நிகழ்வில் யுவன் சங்கர் ராஜா கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தன்னை இந்த உலகிற்கு அடையாளம் காட்டிய தந்தையை விட தான் ஏற்று கொண்ட மதம் தான் முக்கியம் என கருதி தந்தையை புறக்கணித்து அவமரியாதை செய்த யுவன் சங்கர் ராஜாவுக்கு மதம் பிடித்துவிட்டது என விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா திருமணத்தில் அவமானப்படுத்தப்பட்ட சினிமா பிரபலங்கள்.. யார் அந்த பிரபலங்கள் தெரியுமா.?