திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதை எதிர்த்து இசையமைப்பாளர் சபரீசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
அதன் பிறகு, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் தீனா தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
தேர்தல் பரபரப்புக்கு இடையில் பேசிய கங்கை அமரன், இசையமைப்பாளர் தீனாவின் நடவடிக்கை குறித்து தாறுமாறாக விளாசி இருந்தார். அதாவது திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் விதிகளின்படி, ஒருவருக்கு இரண்டு வருட பதவி, 2 வருடம் நீட்டித்து கொள்ளலாம். ஆனால், தீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி 4 வருடம் ஆண்டிருக்கிறார். அதோடு நிறுத்திக் கொள்ளாத தீனா இந்த முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
யூனியனில் அனைவரும் தலைவராவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இது பற்றி ஏற்கனவே இளையராஜா உட்பட பலரும் தீனாவிடம் கூறி இருக்கிறோம். முன்னதாக “தீனா நீ பண்றது சரி இல்ல ஒருவர் நாலு வருடம் தான் தலைவராக பதவி வகிக்க வேண்டும்” என்று இளையராஜா தீனாவிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் தீனா “அவர் எப்ப பாத்தாலும் சும்மா அப்படித்தான் கத்திக்கிட்டு இருப்பார்” என்று இளையராஜாவை தூக்கி எறிந்து பேசினார்.
இளையராஜா அனைவரையும் வளர்த்து விட்டவர். அப்படிப்பட்டவரையே அவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்று தெனாவட்டாக இருக்கும் நபர் எங்களுக்கு வேண்டாம்” என தெரிவித்த கங்கை அமரன் மேலும், “யூனியனின் நடக்க கூடாத சம்பவங்கள் பல நடந்துள்ளன. தீனா யூனியன் தலைவராக பதவி வகித்த போது பல மோசடிகளை செய்துள்ளார்.அவர் செய்த மோசடிகளை மூடி மறைக்கத்தான் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்” என்றும் கங்கை அமரன் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி இருந்தார்.
அதாவது கொரோனா காலத்தில் பணம் கோரி பலர் கையெழுத்து போட்டதாக சில விஷயங்களும் நடந்த இருக்கிறது. இதில் இறந்து போன பவதாரிணி கையெழுத்து போட்டு கூட பணத்தை எடுத்திருக்கிறார்கள். ஏறக்குறைய 80 லட்சத்துக்கும் மேல் பணத்தை சுருட்டியுள்ளனர். அது தெரிந்து விடும் என்பதால், அதை சரி செய்ய, மறுபடியும் தலைவராக நினைக்கிறார் தீனா என்று கங்கை அமரன் தெரிவித்து இருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில் நடந்து முடித்த தேர்தலில் இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேசன் அதிக வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். ஆனால் சபேசன் எதிர்த்து போட்டியிட்ட தீனா 248 வாக்குகளை பெற்று படு தோல்வி அடைந்தார். இளையராஜாவை கடுமையாக பேசியதும், யூனியனில் மோசடி செய்ததுமே தீனாவின் தோல்விக்கு காரணம் என்று யூனியன் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.