சொல்லி வெச்சு அடக்கப்பட்ட இளையராஜாவின் ஆணவம்…. சம்பவம் செய்த ஆஸ்கர் விருதை வென்ற கீரவாணி..

0
Follow on Google News

இசைஞானி இளையராஜா இசையில் இவ்வளவு வல்லமை கொண்டவரோ, அதே அளவு திமிரும் இளையராஜாவுக்கு உண்டு, அறிமுகமான முதல் படம் அன்னக்கிளியில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மெகா ஹிட் கொடுத்தது. அடுத்த பத்து வருடத்தில் இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா என டைட்டில் இருந்தாலே அந்த படம் ஓடும் என்கிற அளவுக்கு இளையராஜா இசைக்காக படம் பார்க்க வந்த கூட்டம் உண்டு.

இந்நிலையில் எதிர்பாராத உச்சத்தில் அமர்ந்த இளையராஜா ஒரு கட்டத்தில் தான் போடுவது தான் அந்த படத்தின் பாடலுக்கு மெட்டு, தான் போடுவது தான் அந்த படத்தின் பின்னணி இசை என இயக்குனர்களிடம் தன்னுடைய திமிரை காட்ட தொடங்கியுள்ளார், இசையில் திருத்தம் செய்ய இயக்குனர் கோரிக்கை வைத்தால், உடனே இளையராஜாவுக்கு கோவம் வந்து விடும் என கூறப்படும் நிலையில், இதற்கு காரணம் அப்போது தமிழ் சினிமாவில் இளையராஜாவை மிஞ்ச ஆளே இல்லை என்கிற நிலை தமிழ் சினிமாவில் இருந்தது தான்.

இந்நிலையில் இளையராஜாவின் திமிர் காரணமாக அப்போது அவரிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக மிக பெரிய இயக்குனர்களான கே.பாலச்சந்தர், மற்றும் மணிரத்தினம் ஆகியோர் இளையராஜா உடன் இருந்த நட்பை முறித்து கொண்டனர் அந்த வரிசையில் இயக்குனர் பாரதிராஜாவும் இடம் பெற்றார், இந்நிலையில் இளையராஜாவின் ஆணவத்தை அடக்கியே தீர வேண்டும் என முடிவு செய்த கே.பாலசந்தர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமானை இசை அமைப்பாளராக ரோஜா படத்தில் அறிமுகம் செய்து வைத்தனர்.

முதல் படத்திலே தேசிய விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் அடுத்தடுத்து தன் இசையால் இளையராஜாவை வீழ்த்தி தமிழ் சினிமாவில் மட்டுமில்லை இந்திய சினிமாவில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக மிக குறுகிய காலத்தில் மிக பெரிய உச்சத்திற்கு சென்ற ஏ.ஆர்.ரகுமான் உலகில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதையும் பெற்றார். ஆனால் ஏ. ஆர்.ரகுமானை தன்னுடைய தயாரிப்பில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்த அதே காலகட்டத்தில்.

இளையராஜாவுக்கு போட்டியாக தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து வந்த எம் எம் கீரவாணியை தமிழ் சினிமாவில் தன்னுடைய இயக்கத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார் கே.பாலச்சந்தர். 1989ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புது புது அர்த்தங்கள் படத்தின் போது இசை அமைப்பாளர் இளையராஜா மற்றும் கே.பாலச்சந்தர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பாத கே பாலசந்தர்.

அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான அழகன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான எம் எம் கீரவாணியை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் கே.பாலசந்தர், அதனை தொடர்ந்து கே. பாலசந்தர் இயக்கிய ஜாதிமல்லி திரைப்படத்திலும் எம் எம் கீரவாணி இசை அமைக்கும் வாய்ப்பை கொடுத்தார் கே. பாலசந்தர். இப்படி இளையராஜா ஆணவத்தை அடக்கியே தீருவேன் என இளையராஜாவுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் கே. பாலசந்தர் அறிமுகம் செய்து வைத்த ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எம் எம் கீரவாணி இருவரில்.

ஏற்கனவே ஏ.ஆர் ரகுமான் உலகில் உயரிய விருதான ஆஸ்கர் அவார்ட் வாங்கி இருந்தார், இப்போது எம் எம் கீரவாணியும் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. ஒரு காலத்தில் தான் தான் எல்லாம் என ஆணவத்தில் ஆடிய இளையராஜா ஆணவத்தை அடக்கியே தீருவேன் என கே. பாலச்சந்தரின் நோக்கம் அவர் மறைந்தாலும் அவர் இசை அமைப்பாளராக அறிமுகம் செய்த்தவர்கள் மூலம் ஆணவத்தில் ஆடிய இளையராஜாவுக்கு தரமான சவுக்கடி தான் எம் எம் கீரவாணிக்கு கிடைத்த இந்த ஆஸ்கர் அவார்ட் என்கின்ற விமசனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.