இனிமையாகப் பாடும் பலருக்கும் பேச்சிலும் அவ்வளவு இனிமை இருக்காது’ என்று சொல்லப்படுவது உண்டு. அந்தக் கூற்றுக்கு விதிவிலக்கான சிலரில் முக்கியமானவர் டி.கே.கலா. பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரியின் மகள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் சண்முகசுந்தரி. இவர் நடிகை மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்திருக்கிறார். இவர் மட்டுமில்லாமல் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உட்பட பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
அவர் தான் பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரி. இவருடைய மகள் தான் டி கே கலா. இவரும் ஒரு பின்னணி பாடகி ஆவார். இவர் தமிழ் பாடகி மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு பல மொழிகளில் பாடி இருக்கிறார். எண்ணற்ற ஹிட் பாடல்களைப் பாடவில்லை; விருதுகளையும் வாங்கிக் குவிக்கவில்லை. ஆனாலும், இவரின் குரலுக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் டப்பிங் குரலும் செய்திருக்கிறார். இவர் 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தில் முத்துப்பாண்டியன் தாயாக நடித்து முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் அதை தொடர்ந்து கஸ்தூரிமான், வெயில், குருவி, பிரிவோம் சந்திப்போம், நீ உன்னை அறிந்தால், மகிழ்ச்சி, ஐ போன்ற பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், படங்களில் முன்னாடி அகத்தியர் படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ‘தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை’ பாடல் மூலம் இவரை அறிமுகம் செய்தது இயக்குநர் ஏ.பி.நாகராஜன். அதை தொடர்ந்து பல பாடல்கள் பாடி உள்ளார். பாடகி, குணச்சித்திர நடிகை, டப்பிங் கலைஞர் என பல துறைகளிலும் வெற்றிமுகம் காட்டியவர், இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் இளையராஜா ஒரு படத்தில் கூட வாய்ப்பு தரவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.
அதில் அவர் பேசுகையில், மறைந்த இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி ஐயா இசையில, ‘நந்தா என் நிலா’, ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ ஆகிய படங்கள்ல நான் பாடினேன். அந்தப் படங்களுக்கான இசைப்பதிவுக்கு இளையராஜா சார்தான் கீபோர்டு வாசிச்சார். பல இசையமைப்பாளர்கள் இசையில நான் பாடியிருக்கேன். ஆனா, இளையராஜா சார் மியூசிக்ல இதுவரை நான் பாடினதில்லை.
அதனால, எனக்கு வருத்தமில்லை. எனக்கு வாய்ப்பு கொடுக்க அவருக்கு இஷ்டமில்லைனு நினைக்கிறேன். ஏன்னா, எனக்குப் பாட வாய்ப்பு கொடுக்கணும்னு அவர் நினைச்சிருந்தா, அவரைத் தடுக்க யாரும் கிடையாது இல்லையா? ரஹ்மான் தம்பி இசையில பல பாடல்கள் பாடியிருக்கேன். தாஜ்மஹால்’ படத்துல
செங்காத்தே…’ பாடல் பாட ரஹ்மான் தம்பி ஒருமுறை என்னைக் கூப்பிட்டார்.
அப்போ திருப்பதிக்குப் போகத் திட்டமிட்டிருந்தேன். அதனால, அந்தப் பாடல் வாய்ப்பு எனக்கு வராதுனு நினைச்சேன். ஆனா, நான் திருப்பதி போயிட்டு ரெண்டு நாள்கள் கழிச்சு வர்ற வரைக்கும் காத்திருந்து, என்னைப் பாட வெச்சு ரெக்கார்டிங் செஞ்சார் ரஹ்மான். அந்தப் பாட்டு வெளியானதும், எம்.எஸ்.விஸ்வநாதன் சார் போன்ல என்னைப் பாராட்டினார். பெரிய இசையமைப்பாளர்ங்கிற எண்ணமே ரஹ்மான் தம்பியின் செயல்பாடுகள்ல தெரியாது. எல்லோர்கிட்டயும் எளிமையா பழகும் குணமும் அவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
நான் பாடகியான புதுசுல. இசையமைப்பாளர் தேவா அண்ணன் தனி இசைக்குழு வெச்சிருந்தார். எனக்குக் கச்சேரி வாய்ப்பு வந்தா, ஆர்க்கெஸ்ட்ரா தயார் பண்ணச் சொல்லி தேவா அண்ணன்கிட்டதான் போய் நிற்பேன். உடனே ஏற்பாடு செஞ்சு கொடுப்பார். அவரின் இசைக்குழுவுடன் சேர்ந்து கல்யாண கச்சேரி ஒண்ணுல நான் பாடினேன். அந்தக் கச்சேரியை ரசிச்சுக் கேட்ட எம்.ஜி.ஆர் ஐயா, அதன்பிறகுதான் `போய்வா நதியலையே’ பாடலைப் பாட எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். காலம் முழுக்க தேவா அண்ணனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்” என பேசியுள்ளார்.