அப்படி என்ன சாதனை செஞ்சு கிழிச்சிட்டார் இளையராஜா… கிழித்து தொங்கவிட்ட முக்கிய பிரபலம்…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ‘இளையராஜா’ என்றே தலைப்பிடப்பட்டுள்ள, இந்தப் படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகிறது. இளையராஜா பயோபிக்கிற்கு கமல் திரைக்கதை எழுத உள்ளதாக கூறப்படுகிறது.

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சேர்ந்த இளையராஜா தனது அண்ணன் பாவலரின் பாட்டுக்குழுவில் இணைந்து இடதுசாரிகளின் கூட்டங்களில் சிறுவயதில் பாடி வந்தார். பின்னர் சினிமாவில் பாட ஆசைப்பட்ட இளையராஜா, எப்படி சென்னை வந்து, வாய்ப்பு தேடி வெற்றிகரமான இசையமைப்பாளராக உருவானார் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக உள்ளது.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இதனையடுத்து பலரும் இளையராஜாவை சமூகவலைதளங்களில் கொண்டாடி வரும் நிலையில், சிலர் அவரின் நெகட்டிவான பக்கம் தொடர்பான வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல விமர்சகரான சவுக்கு சங்கர் இளையராஜா குறித்து பேட்டி ஒன்றில் மிக கடுமையாக பேசிய பேச்சு ஓன்று வைரலாகி வருகிறது.

அதில், இளையராஜா எந்த அளவுக்கு ஒரு அற்பமான மனிதர் என்பதை சொல்கிறேன். என தன்னுடைய பேச்சை தொடங்கிய சவுக்கு சங்கர். எஸ் பி பாலசுப்பிரமணியம் வெளிநாடுகளில் கச்சேரி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தார். டிக்கெட்டெல்லாம் விற்பனையாகி விட்டது. இந்த இசை பயணம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னவர் இளையராஜா. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என பேசிய இளையராஜா.

மேலும் இளையராஜா என்ன அப்படி தன்னுடைய தமிழ் சமூகத்திற்கு செய்துவிட்டார் என கேள்வி எழுப்பிய சவுக்கு சங்கர். பணம் வாங்கிக்கொண்டு நல்ல இசையை இந்த சமூகத்திற்கு கொடுத்திருக்கிறார். தேவா கூடத்தான் அவ்வளவு அழகான பாடல்களை கொடுத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இளையராஜாவை விட நல்ல குத்து பாடல்களை தேவா கொடுத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் ஹிட்டானதால் உடனே இளையராஜாவை நாம் என்ன கடவுளாக பார்க்க வேண்டுமா என்ன?.

ஏ ஆர் ரஹ்மான் வரும் வரை பின்னணி இசைக் கலைஞர்கள் யாருமே அங்கீகரிக்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா…? இளையராஜா இருந்தவரை யாரெல்லாம் பாடகர்கள் இருந்தார்கள் யோசித்து பாருங்கள். அவரது காலத்தில் எஸ்பிபி, மனோ, ஜானகி, சித்ரா, சுவர்ணலதா இவர்களைத் தாண்டி யாராவது அவரது பெரிய பாடகர்களா இருந்திருக்கிறார்களா சொல்லுங்கள்… ஏ ஆர் ரஹ்மான் எத்தனை பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஆவரது ஆல்பத்தில் எல்லோருடைய பெயரும் இருக்கும். இளையராஜா அதை செய்தாரா?

இந்தச் சமூகத்திற்கு இளையராஜா என்ன அப்படி கிழித்து விட்டார்? என ஆவேசமாக கேள்வி எழுப்பிய சவுக்கு சங்கர், மேலேயும் இவர் நம்முடைய ஆள் என்று சொல்வதற்கு இதில் என்ன இருக்கிறது. அவர் காசு வாங்கிக்கொண்டு இசையமைக்கிறார் அவ்வளவுதான். அவர் ஒரு சுயநலமி, ஒருமுறை ஏ ஆர் ரஹ்மான் தமிழ் சினிமா இசைக்குள் டெக்னாலஜிகளை நுழைக்க முயற்சி எடுத்து வெளிநாட்டில் இருந்து ஒரு இசைக்கருவியை இங்கே வரவைக்கிறார்.

இப்போது பெரிதாக கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் அப்போது கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. இதற்கிடையே இளையராஜா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அந்த இசைக் கருவியை கிட்டத்தட்ட ஒரு வருடம் வெளியே வராதபடி பார்த்துக் கொண்டார். இளையராஜாவிடம் ரஹ்மான் பாட்டை கேட்டீர்களா என்று கேட்டால், கேட்கவில்லை என்று சொன்னார். ஆனால் இளையராஜாவின் திருவாசக வெளியீட்டில் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டார்.” என இளையராஜாவை மிக கடுமையாக சவுக்கு சங்கர் பேசியுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வரும் நிலையில், இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.