இளையராஜா பயோபிகில் நடிகர் தனுஷ் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கு பல குளறுபடிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்தியில் உள்ள ஒரு பட நிறுவனம் இளையராஜாவின் பயோபிக்கை எடுக்க முன் வந்தது. இதனை தொடர்ந்து இளையராஜா பயோபிக் என்பதால் இளையராஜாவை நேரடியாகவே அந்த நிறுவனம் சென்று சந்தித்து, இது குறித்து பேசியது.
இந்த நிலையில் தன்னுடைய சொந்த கதை என்றாலும் இந்த படத்திற்கான ராயல்ட்டியை இளையராஜா வாங்காமல், அந்த படத்தின் ஒரு பங்குதாரராக தன்னை இணைத்துக் கொண்டார். அந்த வகையில் இளையராஜா பணம் போடாமலே அந்த படத்தில் பார்ட்னர் ஆக உள்ளே வந்தார். இப்படித்தான் இந்த படம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இயக்குனர் முடிவு செய்யும் பேச்சுவார்த்தையில் இந்தியில் மிகப் பிரபல இயக்குனராக பால்கி முதன் முதலில் பேசப்பட்டு உறுதி செய்யப்பட்டார்.
ஆனால் சில காரணங்களால் பால்கி அந்த ப்ராஜெக்ட் இருந்து வெளியேறினார், இதனைத் தொடர்ந்து, இந்த படத்திற்கு இயக்குனர் கிடைக்காமல் படம் தொடங்கப்படாமலே இருந்த நிலையில், இந்த படத்தை இயக்க மாரி செல்வராஜ் அல்லது அருண் மாதேஷ் இருவரிடம் நடந்த பேச்சுவார்த்தையில், இறுதியில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஷ் கமிட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இளையராஜா பயோபிக் படம் என்பதால் இளையராஜாவும் இயக்குனர் அருண் மாதேசை அழைத்துக் கொண்டு தன்னுடைய சொந்த கிராமமான பண்ணை புரம் இன்னும் பல இடங்களுக்கு சென்று, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சுவாரசிய சம்பவங்களையும், தான் பட்ட கஷ்டங்களையும் அவரிடம் பகிர்ந்து கொண்டார் இளையராஜா. தன்னுடைய வாழ்க்கை நடத்த அனைத்து சம்பவங்களையும் இளையராஜா தெரிவிக்க அதை எல்லாம் ரெக்கார்ட் செய்து வைத்திருந்தார் அருண் மாதேஷ்.
இளையராஜா சொன்ன மொத்த தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்ட முக்கியமானவற்றை மட்டும் எடுத்து அந்த கதையை விரிவு படுத்தினார் அருண் மாதேஷ். இப்படி இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தை தானாக முன்வந்து தயாரிக்க வந்த மும்பையைச் சேர்ந்த ஒரு பட தயாரிப்பு நிறுவனத்திற்கும், பட குழுவுக்கும் இடையில் நடந்த சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த மும்பை நிறுவனம் இந்தப் படத்தில் இருந்து வெளியேறியது.
இதனால் இந்த படம் தொடங்கப்படாமலே இழுத்தடிக்கப்பட்டது, இந்த நிலையில் இளையராஜாவின் பயோபில் தனுஷ் நடித்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்ததால், மும்பை சென்று பல தயாரிப்பு நிறுவனங்களை சந்தித்து அப்ரோச் செய்திருக்கிறார் தனுஷ், ஆனால் எந்த ஒரு இன்வெஸ்டர்களும் தயாரிப்பாளர்களும் தனுஷின் முயற்சிக்கு முன்வரவில்லை,
இதனை தொடர்ந்து இளையராஜா பயோபிக்கில் நடிக்க தனுஷ் தயாராக இருந்தும் இயக்குனரும், ஸ்கிரீன் பிலே தயாராக வைத்திருந்தும்m படத்திற்கான இன்வெஸ்டரும் தயாரிப்பாளரும் கிடைக்காது இந்த படத்தின் ப்ராஜெக்ட் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் மிக பெரிய இசை ஞானி படத்தை தயாரிக்க ஒருவர் கூடவா முன் வரவில்லை, இது என்னடா இளையராஜாவுக்கு வந்த சோதனை என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.