மத்திய அரசு இசைஞானி இளையராஜாவுக்கு மாநிலங்கவை உறுப்பினர் பதவியை வழங்கியுள்ளது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் மூத்த இயக்குனர்களான பாரதிராஜா , பார்த்திபன் போன்றவர்கள் இளையராஜா மாநிலங்கவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வந்தாலும், ஒரு சில சினிமா பிரபலங்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
சமீபத்தில் அம்பேத்கார் உடன் பிரதமர் மோடியை இளையராஜா ஒப்பிட்டு கருத்து தெரிவித்த போதே மிக கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானார் இளையராஜா,அதே வேலையில் அடுத்தவர் என்ன நினைக்கிறார்கள் என்பதை தான் இளையராஜா பேச வேண்டும் என்பது சர்வாதிகாரம், அவருடைய கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார், அது அவருடைய கருத்து உரிமை,
ஆனால் இசைஞானி அம்பேத்கார் உடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டதே தவறு என்பது அவருடைய கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என இசைஞானி இளையராஜா ரசிகர்கள் அவருடைய கருத்துக்கு ஆதரவாகவும், இசைஞானிக்கு எதிராக விமர்சனம் செய்து வந்தவர்களுக்கு பதிலடி கொடுத்தும் வந்தனர். மேலும் பிரதமரை அம்பேத்கார் உடன் ஒப்பிட்டு பேசுவதற்கு காரணம் அவருக்கு விரைவில் மாநிலக்களவை உறுப்பினர் பதவி வழக்கப்படலாம் என்கிற விமர்சனம் அப்போதே எழுந்தது.
தற்பொழுது மூன்று பிரிவுகளின் கீழ் மாநிலக்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதில் பெண்களுக்கான கோட்டாவில் தடகள வீராங்கனை PT உஷா, மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு, மேலும் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு, அதில் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்கிற அடிப்படையில் தான் இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது, அவருடைய இசை சாதனையை பாராட்டும் விதத்தில் அல்ல என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
இளையராஜா தன்னை எப்பொதும் எந்த ஒரு சாதி அடையாளத்துக்குள் அடக்கி கொண்டவர் கிடையாது, அணைத்து சாதி மக்களால் கொண்டாட படுகின்றவர், ஒரு முறை அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் இளையராஜாவுக்கு போஸ்டர் அடித்த போது கூட அதற்கு எதிப்பு தெரிவித்து, இனி இது போன்று செய்யக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், அப்படி பட்ட இளையராஜாவுக்கு சாதி அடிப்படையில் எம்பி பதவி கொடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இளையராஜாவுக்கு எம்பி பதவி அல்ல அவருக்கு ஜனாதிபதவியே கொடுக்கலாம் என கமல்ஹாசன் பாராட்டியுள்ள அதே சினிமா துறையை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் என்பவர், இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறித்து பேசுகையில், அவர் சார்ந்த இன மக்களுக்கு இசையால் பெருமை சேர்த்தாரே தவிர, நல்ல மனதால் ஒன்றும் செய்யவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், இளையராஜா, ஒரு தமிழர் மிகச் சிறந்த மேதை, அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கு. இதை பயன்படுத்தி மேல் சபையில் அந்த மக்களுக்கு அவர் பேச வேண்டும் என கே.ராஜன் தெரிவித்துள்ளார். இப்படி தமிழகதை சேர்ந்த எதிர்க்கட்சிகள் கூட இளையராஜாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள எம்பி பதவிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தும் வரும் நிலையில், சினிமா துறையினர் ஒரு குறிப்பிட்டவர்கள் இளையராஜாவை கடுமையாக விமர்சனம் செய்து வருவது அவர்களின் வன்மத்தின் வெளிப்பாடு என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.