இளையராஜா துட்டு வாங்கிட்டு தான் இதை செய்தார்… வெளுத்து வாங்கிய முக்கிய பிரபலம்..!

1
Follow on Google News

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் பனைபுரத்தில் பிறந்து இன்று மாநிலங்கவை உறுப்பினராக நாடாளுமன்ற செல்ல இருக்கிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவையும் இளையராஜாவையும் பிரிக்கவே முடியாது என்கிற அளவுக்கு சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தனது இசையால் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இசை விருந்தை அளித்து வரக்கூடியவர் இசைஞானி இளையராஜா என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். அம்பேத்கார் உடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா கருத்து தெரிவித்திருந்தது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இளையராஜா பாஜகவின் அனுதாபியாக மாறிவிட்டார் எனறும், அம்பேத்கார் உடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டது தவறு என கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருந்து வந்தார் இளையராஜா.

இந்நிலையில் தற்பொழுது இளையராஜாவை கௌரவ படுத்தும் விதத்தில் அவருக்கும் மாநிலங்கவை உறுப்பினர் பதவி வழங்கியுள்ளது மத்திய அரசு. இதற்கு திரையுலகை சேர்ந்த கமல்ஹாசன், பார்த்திபன் உட்பட சினிமா துறையை சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளது குறித்து பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மிக கடுமையாக இளையராஜாவை தாக்கியுள்ளார்.

அவர் பேசியதாவது, இவர்களுக்கு ரொம்ப விருப்பம் இருந்தால் அமெரிக்காவின் அதிபராக கூட இளையராஜாவுக்கு தகுதி உண்டு என்று சொல்லிவிட்டு போகட்டும், யாரும் அவர்களை தடுக்கவில்லை. இளையராஜா துட்டு வாங்கிக்கொண்டு இசையமைக்கின்றவர், அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். எதற்காக இளையராஜாவை தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.

பணம் வாங்கிக் கொண்டு இசை அமைக்கின்றார், அவருடைய இசை நன்றாக இருக்கின்றது, அவரை இசையை பாராட்டலாம். ஓசியில் அவர் இசை அமைக்கவில்லை, இது போன்ற ஆட்களை பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், வழிபட வேண்டாம். இளையராஜா அருமையாக இசையமைத்துள்ளார், அந்த படம் நன்றாக இருக்கின்றது, பாடல் கேட்க கேட்க நன்றாக இருக்கின்றது, இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

என்னுடைய பார்வையில் இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது எல்லாம் ரொம்ப அதிகம், இளையராஜாவை பற்றி பேசக்கூட நான் விரும்பவில்லை என முக்கிய பிரபலம் சவுக்கு சங்கர் தெரிரிவித்துள்ளது இசைஞானி இளையராஜா ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை காப்பாற்ற பின்வாசல் வழியே நுழையும் ரஜினிகாந்த்… தஞ்சை பெரிய கோவிலில் என்ன இருக்கு தெரியுமா.?

1 COMMENT

  1. Ilayaraja not a social worker. He belongs to a industry running on money laundering and black money and billionaire born in a marginalized family background Because he praised Modi left and right to escape from clutches of IT authorities. Quid pro quo appointment is 200% no one can deny.

Comments are closed.