இளையராஜா பற்றி தெரிந்தே அவரிடம் சிக்கி சின்னாபின்னமாகும் தனுஷ்….

0
Follow on Google News

கிராமத்திய இசை மெட்டுகளால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டியிழுத்தவர் இசைஞானி இளையராஜா. 70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், காதல், கோபம், சோகம், கொண்டாட்டம் என அனைத்து விதமான உணர்வுகளுக்கும் உயிரூட்டும் வகையில் பிரமாதமாக இசையமைப்பதில் கைதேர்ந்தவர் ஆவார். இவ்வாறு ஒரேயொரு ஹார்மோனியப் பெட்டியில் இசைஜாலத்தை நடத்திய இளையராஜா ஒரு கட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக மாறி விட்டார்.

அவரது புகழ் பட்டிதொட்டி எங்கும் ஓங்கியிருந்தது. 80களில் உருவான பெரும்பாலான படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைத்துள்ளார். ‘இளையராஜா பாடல் இருந்தாலே படம் ஹிட் தான்’ என்ற அளவிற்கு மாறி, இயக்குனர்கள் பலரும் போட்டிபோட்டு இளையராஜாவிடம் பாட்டு கேட்டு குவிந்த காலம் அது. அதுமட்டுமின்றி, இளையராஜாவிற்கு நிகரான இசையமைப்பாளர் எவரும் இல்லை என்று ரசிகர்களும் அவரது பாடல்களை கொண்டாடி தீர்த்தனர்.

இவ்வாறு எக்கச்சக்க புகழ்களைப் பெற்று ஒய்யாரமாக வலம் வந்த இளையராஜாவிற்கு தலைக்கணமும் சற்று அதிகமாகவே இருந்தது என்பது மறுக்க முடியாது. ஆமாங்க…என்னதான் திறமையானவராக இருந்தாலும் அவரது சில குணாதிசயங்கள் மற்றும் திமிரான பேச்சுக்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. பல நேரங்களில் சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார்.

அதாவது, இயக்குனர் மீது கோபம் வந்துவிட்டால் இனிமேல் உங்கள் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என பட்டென்று பேசி விடுவாராம். அந்த அளவிற்கு அகங்காரத்தை வெளிப்படுத்தி பல இயக்குனர்களுடன் சண்டை போட்ட கதைகளும் இருக்கின்றன. குறிப்பாக், இயக்குனர் பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ் என பல இயக்குனர்களுடன் வம்பாகப் பேசி சண்டை போட்ட நிகழ்வுகளும் உள்ளன.

அவ்வளவு ஏன்? நம்ம சூப்பர் ஸ்டார கூட மனுஷன் விட்டு வைக்கல… ரஜினியின் பாட்ஷா படம் உருவானபோது ரஜினியிடம் கூட சண்டை போட்டதாக செய்திகள் உள்ளன. அதன்பின் இப்போதுவரை அவர் ரஜினி படத்திற்கு இசையமைக்கவில்லை. இப்படி சண்டை போடுறது மட்டுமில்லாமல், அந்த பகையைப் பல வருடங்களுக்கும் எடுத்துச் செல்கிறார் என்பதுதான் கொடுமை..

இதனாலேயே, ‘எதுக்கு வம்புங்குற” மாதிரி மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் கூட இசைப்புயல் AR. ரஹ்மானைத் தேடிச் செல்கின்றனர். என்னதான் சர்ச்சைக்குரிய ஆளாக இருந்தாலும், இளையராஜாவுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில்தான், இளையராஜாவின் தீவிர ரசிகரான இயக்குனர் பால்கி, இசைஞானியின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது, இதிலென்ன பிரச்சினை என்றால், தான் இசையமைக்கும் படத்திலேயே காட்சிகளில் சில மாற்றங்களை செய்யுமாறு இயக்குனர்களிடம் சண்டை போட்ட இளையராஜா, இப்போது அவரின் வாழ்க்கை கதையை படமாக எடுத்தால் அவர் என்னென்ன ஆட்சேபம் தெரிவிப்பார் என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்…

எதையெல்லாம் மாற்ற சொல்வார் என்பது தெரியாது. மேலும், இயக்குனர் கஷ்டப்பட்டு எடுக்கும் சில காட்சிகளை அசால்ட்டாக நீக்கச் சொல்லவும் வாய்ப்பிருக்கிறது… இவ்வாறு இளையராஜா கூறும் அத்தனை நிபந்தனைகளையும் தாண்டி இயக்குனர் எப்படி படத்தை முடித்து வெளியிடுவார் என்பது தெரியவில்லை. இந்த படம் எடுக்கப்படும் போதுதான் பல சர்ச்சைகள் வெடிக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதைக் காத்திருந்து பார்ப்போம்..