உயரிய விருதுக்காக சங்கியாக மாறினாரா இளையராஜா… அவர் பின்னணியில் இருப்பது யார் தெரியுமா.?

0
Follow on Google News

இந்திய சினிமாவின் இசை சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா, தமிழர்கள் உசத்தில் வைத்து கொண்டாடும் இசை ஞானி. எளிதில் கோபம் அடைய கூடியவர், பொது இடங்களில் யாராவது அவரிடம் ஏடா.. கூடமா கேள்வி எழுப்பினால், அந்த இடத்திலே கோபத்துடன் பதிலடி கொடுக்க கூடியவர். சுமார் மூன்று தலைமுறையை தனது இசையால் கட்டி போட்டுள்ள இசை ஜாம்பவம் இசைஞானி இளையராஜா என்று சொன்னால் அது மிகையாகது.

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து இசைஞானி இளையராஜா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகி, குறிப்பிட்ட ஒரு தரப்பினர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இளையராஜாவை விமர்சனம் செய்து வருகின்றனர். ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இளையராஜா தெரிவித்ததாவது.

பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார்.

அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இதற்கு இளையராஜா சங்கியாக மாறிவிட்டார். இளையராஜா தம்பி கங்கை அமரன் பாஜகவில் உள்ளார், அவர் சமீபத்தில் தான் நீண்ட வருட சட்டைக்கு பின் அண்ணன் இளையராஜா உடன் இணைத்தார், அவர் தான் இளையராஜாவை இவ்வாறு பேச வைப்பது என்றும், மேலும் மத்திய அரசின் தயவால் இந்தியாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்காக பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுகிறார் இளையராஜா என கடுமையாக ஒரு தரப்பினர் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

ஆனால், இளையராஜா இதற்கு முன்பு கூட பிரதமர் மோடி குறித்து பாராட்டும் விதத்தில் பேசியுள்ளார், மேலும் அவரின் தம்பி கங்கை அமரன் பின்னனியில் இருந்து செயல்படுகிறார் என்பது அவதூறான விமர்சனம் என்றும், அவர் யாருடைய பேச்சையும் கேட்க கூடிய ஆள் கிடையது, சுயமாக முடிவு எடுக்க கூடியவர், இதனாலே அவருடன் பலருக்கு முரண்பாடு ஏற்பட்டது குறிப்பிடதக்கது, மேலும் அவர் விருதுகள் பின்னால் செல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

விருதுகள் அவரை தேடி வரும் நிலைக்கு அவரது சாதனைகள் இன்னும் பல தலைமுறைக்கு எடுத்து செல்லும் என்றும். பிரதமர் குறித்த அவருடைய கருத்து அவரது கருத்து சுதந்திரம். ஒரு குறிப்பிட்ட தரப்பினர் பிரதமர் மோடியை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் விருப்பப்படி தான் இளையராஜா பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என இளையராஜா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் சாதித்த நெப்போலியன்…பலர் வியந்து பார்க்க அமெரிக்காவில் என்ன செய்கிறார் தெரியுமா.?