ஓசில மியூசிக் போடலேல… காப்புரிமை கேட்ட இளையராஜாவுக்கு பிரபல நிறுவனம் வைத்த செக்…

0
Follow on Google News

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த 4500 பாடல்களை இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் அவரது அனுமதி இன்றி பயன்படுத்துவதாக இளையராஜா தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக, இசையமைப்பில் உருவான சுமார் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி என்ற இரண்டு இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. தற்போது ஒப்பந்தம் முடிந்த பிறகும், இந்த இரண்டு இசை நிறுவனங்களும் தன்னிடம் முறையான அனுமதி பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி இளையராஜா தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்று எக்கோ நிறுவனம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கில் இரு தரப்பினரும் அவ்வப்போது அவர்களது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் எக்கோ நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோரின் அமர்வில் இன்று விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் என்பவர் எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜராகி இருந்தார்.

இந்த விசாரணையில் அவர் கூறுகையில், சம்பளம் கொடுத்து இசையை வாங்கும் தயாரிப்பாளர் தான் அந்த பாடல்களுக்கு முதல் காப்புரிமை உரிமையாளர் ஆகிறார். அப்படி பார்க்கையில், பணிப்புரிமை உரிமையாளரான படத்தின் தயாரிப்பாளர் இடம் ஒப்பந்தம் செய்து எக்கோ நிறுவனம் 4500 பாடல்களை வாங்கியுள்ளது.பாடல்களுக்கு இளையராஜாவிடம் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.

அதே சமயம் பதிப்புரிமை தொடர்பாக இளையராஜாவும் தயாரிப்பாளர்களிடம் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.அப்படி இருக்கையில் இளையராஜாவால் பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது. இளையராஜாவுக்கு சம்பளம் கொடுத்து பாடல்களை வாங்கும் தயாரிப்பாளர்கள் தான் முதல் காப்புரிமை உரிமையாளர் ஆகிறார். இசையை திரித்தாளோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும்தான் இளையராஜா தார்மீக உரிமையின் அடிப்படையில் வழக்கு தொடர முடியும்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர் இசையமைத்த பாடல்களுக்கான பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால் இளையராஜா அவ்வாறு செய்யவில்லை. அவர் இசையமைத்த பாடல்களுக்கான பதிப்புரிமையை படத்தின் தயாரிப்பாளர்களிடம் வழங்கிவிட்டார். அவரது பாடல்களுக்கான காப்புரிமையை வைத்திருக்க நினைத்தால் அவர் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும்.

எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்று கூறி பாடல்கள் மீது உரிமை கோர முடியாது” என்று எக்கோ நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். எப்போ நிறுவ அனைத்தையும் தரப்பு வாதங்கள் இன்று முடிவடைந்ததை தொடர்ந்து, இளையராஜா பிறப்பு வாதங்களுக்காக விசாரணையை வருகிறது 19ஆம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here