என் படத்திற்கு நீங்க ரெக்கார்டிங் பண்ணவே வேண்டாம்… இளையராஜாவிடம் நேரடியா சண்டையிட்ட விஜயகாந்த்…

0
Follow on Google News

70 மற்றும் 80களில் இசைஞானி இளையராஜா இசை அமைத்த பாடல்களுக்கு தாளம் போடாத ரசிகர்களே கிடையாது. சுமாரான படம் என்றாலும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்றால் படம் ஹிட் அடித்து விடும். இதனாலேயே அந்த சமயத்தில் பெரும்பாலான இயக்குனர்கள் பல மாதங்கள் காத்திருந்து இளையராஜாவிடம் பாடலை வாங்கி விட்டு செல்வார்கள்.

இந்நிலையில் எண்பதுகளில் ரஜினி கமலுக்கு இணையாக தமிழ் சினிமாவில் ஒய்யாரமாய் வளம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். 1988ல் விஜயகாந்த் நடிப்பில் உருவான பூந்தோட்ட காவல்காரன் படத்தை பல்வேறு விநியோகஸ்தர்களும் வாங்க மறுத்த போதிலும், இளையராஜா இசையமைத்ததாலேயே 175 நாட்கள் திரையரங்குகளில் அந்த படம் வெற்றிகரமாக ஓடிய சம்பவமும் நடந்துள்ளது.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ராவுத்தரும் விஜயகாந்த் இணைந்து இயக்குனர் செந்தில்நாதன் இயக்கிய பூந்தோட்ட காவல்காரன் படத்தை தயாரித்தார்கள். அப்போது செந்தில்நாதன் புது இயக்குனர் என்பதால், அவரது படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயங்கினார்கள். அந்த சமயத்தில் திருச்சி விநியோகஸ்தர் அடைக்கலராஜ் மட்டும் ராவுத்தரை சந்தித்து அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.

ஒருவழியாக படத்தை எடுத்து பின்னணி இசைக்காக இளையராஜாவிடம் கொடுத்தனர். அந்த சமயத்தில் இளையராஜாவுடன் இயக்குனர் கோகுல கிருஷ்ணாவும் சேர்ந்து அந்த படத்தை பார்த்திருக்கிறார். இருவருக்கும் படம் பிடிக்கவில்லை. இதனால் இயக்குனர் கோகுல கிருஷ்ணா இந்த படம் நன்றாக இல்லை. இதை வாங்கி விநியோகம் செய்தால் உனக்கு நஷ்டம் தான் ஏற்படும் என்று அடைக்கல ராஜிடம் சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்டதும் பதறிப்போன அடைக்கலராஜ் உடனடியாக ராவுத்தரிடம் சென்று கொடுத்து அட்வான்ஸ் ஐ திருப்பி வாங்கி விட்டார். இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் விறுவிறுவென பரவியது. இதற்கு மேலும் இந்த படத்தை வாங்குவதற்கு யாரும் முன் வர மாட்டார்கள் என்று யோசித்த ராவுத்தரும் விஜயகாந்த்தும் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டனர்.

இயக்குனர் செந்தில் நாதனும் தனது இயக்கம் அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்று யோசித்து சோகமடைந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இதற்குப் பிறகு விஜயகாந்த் ராவுத்தரையும் சந்தித்தால் அவர்கள் திட்டுவார்கள் என்று பயந்து போன செந்தில்நாதன், மீண்டும் தனது குருநாதரான எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவியாளராக சேர்ந்து விட்டாராம்.

இதன்பிறகு, நேரடியாக இளையராஜாவை சந்தித்த விஜயகாந்த், “ஏன் கண்ட கண்ட ஆட்களையும் வைத்துக்கொண்டு படம் பார்க்கிறீர்கள். இந்தப் படத்திற்கு ரீ ரெகார்டிங் வேண்டாம்” இன்று சண்டை போட்டுவிட்டு கிளம்பி விட்டாராம். அதன் பிறகு அந்த படம் ரிலீஸ் செய்யாமலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து படத்தின் பிரிண்ட் எடுத்து வர சொன்ன இளையராஜா பூந்தோட்ட காவல்காரன் படத்திற்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார்.

இருப்பினும் விஜயகாந்த் மற்றும் ராவுத்தர் இருவருக்கும் அதை பார்க்கும் ஆர்வம் கூட இல்லை. இளையராஜா இசையமைத்த பிறகு படத்தை விநியோகஸ்தர்களுக்கு போட்டு காண்பித்து இருக்கின்றனர். அப்போது இயக்குனர் செந்தில்நாதன் மட்டும் சென்று இருக்கிறார். படம் முடிந்ததும் ‘எங்கே செந்தில் நாதன்?’ என எல்லோரும் கேட்க, கூனி குறுகி வருகிறார் செந்தில் நாதன். ‘படம் சூப்பர்.. பின்னிட்டயா’ என சொல்லி எல்லோரும் போட்டி போட்டு படத்தை வாங்க முன் வந்திருக்கின்றனர்.

இதைப் பார்த்ததும் விஜயகாந்த் ராவுத்தரும் ஆச்சரியப்பட்டு போய் விட்டனர். படத்தை பார்த்த விஜயகாந்த் செந்தில்நாதனை கட்டிப்பிடித்து பாராட்டி ஒரு கார் ஒன்றை வாங்கி கொடுத்து ‘தமிழ்நாடு முழுவதும் சென்று படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என பார்த்து விட்டு வா’ என சொல்லி அனுப்புகிறார். இப்படி பூந்தோட்ட காவல்காரன் படத்தை தனது இசையால் ஓட வைத்தார் இளையராஜா. அதன்பின் செந்தில் நாதனும் பல படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.