உண்மையை சொல்ல தயங்க மாட்டேன்..மாஸ் காட்டும் இளையராஜா..! குவியும் ஆதரவு..

0
Follow on Google News

பிரதமர் மோடி குறித்து இளையராஜா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சமூக நீதி தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்’ என்று இளையராஜா எழுதிய முன்னுரைக்கு குறிப்பிட்ட ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜாவின் இந்த கருத்து இயக்குனர் மாரி செல்வராஜ், நவீன் போன்ற ஒரு தரப்பினர் எதிர்ப்பும் மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வரும் நிலையில் இளையராஜா தனது சகோதரர் கங்கை அமரனிடம் வாயிலாக தெரிவித்ததாவது. நான் படத்தில் போட்ட டியூனையும் நல்லா இல்லை என்று சொன்னால் திரும்ப வாங்க மாட்டேன். என் மனதில் என்ன உள்ளதோ, உண்மையை சொல்வதற்கு தயங்க மாட்டேன். மற்றவர்களுடைய கருத்து வேறுமாதிரியாக இருக்கலாம். இது என்னுடைய கருத்து.

மற்றவர்கள் கருத்து எனக்கு பிடிக்காவிட்டாலும், அது பிடிக்கவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். நான் கூறியதை அரசியலாக்க விரும்பவில்லை. மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றும் சொல்ல மாட்டேன். ஓட்டுப் போடாதீர்கள் என்றும் சொல்ல மாட்டேன்.’ என்று கூறியுள்ளார். மேலும் இளையராஜாவுக்கு ஆதரவாக தெலுங்கானா மற்றும் புதுசேரி ஆளுநர், தமிழிசை சௌந்தர்ராஜன், இணையற்ற இசைஞானி இளையராஜா பார்புகழும் பாரத பிரதமரை,

அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதில் இருந்து வெளிவந்த உணர்வுகளை வெளியிட்டதற்காக இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்க சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து நடிகை குஷ்பு தெரிவித்ததாவது, எதற்கெடுத்தாலும் மத்திய அரசு கருத்துச்சுதந்திரம் அளிக்கவில்லை என பேசும் இ எதிர்க்கட்சிகள் இன்று ஒன்றுதிரண்டு அம்பேத்கர்-மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரத்திற்காக பேசும் கட்சிகளால் இளையராஜாவின் கருத்தை ஏன் ஏற்க முடியவில்லை என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் பலர் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

அழிவை நோக்கி தமிழ் சினிமா … இன்றைய சினிமா குறித்து முக்கிய பிரபலம் என்ன சொல்கிறார் தெரியுமா.?