இளையராஜா மூன்று வேளை சாப்பிடவே நாங்க தான் காரணம்.. மனோபாலா சர்ச்சைக்கு கிடைத்த சரியான பதில்..

0
Follow on Google News

ஹார்மனிய பெட்டியை தூக்கி கொண்டு பல கச்சேரிகளில் தனது இசையால் ரசிகர்களை வசியம் செய்து கொண்டிருந்த இளையராஜா கால கட்டம் அது. மேலும் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளராக இருந்து கொண்டு சினிமாவில் இசை அமைப்பாளர் வாய்ப்பு தேடி வந்த இளையராஜாவை ,தயாரிப்பாளரரும் கதை ஆசிரியரியருமான பஞ்சு அருணாச்சலம் அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக இளையராஜாவை அறிமுகம் செய்கிறார்.

இளையராஜாவை இசையமைப்பாளராக பஞ்சு அருணாச்சலம் அறிமுகம் செய்வதற்கு பல தரப்பில் இருந்து கடும் எதிப்பு வருகிறது, இந்த பையனுக்கு என்ன தெரியும்.? இவருக்கு ரீ-ரெக்கார்டிங் தெரியுமா.? என பலரும் தெரிவிக்க அதையல்லாம் பொருட்படுத்தாமல் இளையராஜா மீது முழு நம்பிக்கை வைத்து அன்னக்கிளி படத்தில் அறிமுகம் செய்து வைத்தார் பஞ்சு அருணாச்சலம்.

எப்படி ஏ.ஆர்.ரகுமான் ரோஜா என்கிற ஒரே படத்தில் மிக பெரிய உயரத்துக்கு சென்றாரோ.! அனிரூத் எப்படி வொய் திஸ் கொலைவெறி என்கிற ஒரே பாடலில் உலக புகழ் பெற்றாரோ! அதே போன்று இளையராஜா இசையமைத்த முதல் படம் “அன்னக்கிளி” மகத்தான வெற்றி, அந்த படத்தில் இடம்பெற்ற அன்னக்கிளி ஒன்னைத்தேடுது”, “மச்சானைப் பார்த்தீங்களா”, என்கிற ஒரே பாடலில் புகழின் சிகரத்தை அடைந்தார் இளையராஜா.

அன்னக்கிளி படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய பஞ்சு அருணாச்சலம், அருகில் இருந்த இளையராஜாவை பார்த்து. உன்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்க போகிறவர்கள் இந்த பத்திரிக்கையாளர்கள் தான், இவர்களிடம் காலில் விழுந்து ஆசி வாங்கு என பஞ்சு அருணாச்சலம் சொன்ன அடுத்த நிமிடமே சற்றும் யோசிக்காமல் பத்திரிகையாளர் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் இளையராஜா,

அந்த வகையில் சமீபத்தில் மனோபாலா மறைவுக்கு இளையராஜா வெளியிட்ட இரங்கல் செய்தியில் “நான் காரில் போகும் போது பாலத்தில், காரில் வைத்து பார்ப்பதற்காக காத்திருந்த எத்தனையோ டைரக்டர்களில் மனோபாலாவும் ஒருவர் என்று இளையராஜா பேசி உள்ளது பெரும் சர்ச்சையாக தற்பொழுது வெடித்து, மிக பெரிய விவாத பொருளாக தற்பொழுது அது மாறியுள்ளது.

நாளையே இளையராஜா பற்றி பஞ்சு அருணாச்சலம் உறவுகள் யாராவது, இளையராஜா மூன்று வேளை சோறு சாப்பிடுவதற்கும், பலர் காத்திருந்து பார்க்க காரில் போகுமளவிற்கு வளர்ந்ததே எங்களால்
தான், நாங்கள் இல்லையென்றால் அவர் ஹார்மோனியம் பெட்டியுடன் தெருவில் தான் இசைத்துக் கொண்டிருப்பார் என்று சொன்னால் அதை இளையராஜா மகிழ்ச்சியாக ஏற்று கொள்வாரா என இளையராஜாவை வசை பாடி வருகின்றவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இளையராஜாவே அதை மறுக்க மாட்டார், வெறுக்க மாட்டார் என்பதற்கு அவரே பல மேடைகளில் பஞ்சு அருணாச்சலம் தனக்கு செய்த உதவி பற்றி பேசியுள்ளார். ஏன் சமீபத்தில் இளையராஜா சகோதரர் கங்கை அமரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூட, பஞ்சு அருணாச்சலம் இல்லை என்றால் எங்கள் பரம்பரை இல்லை. எங்கள் குடும்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பஞ்சு அருணாச்சலம் தான் எனவும், இளையராஜா இசையமைக்க காரணமாக இருந்தவர் எங்களை வளர்த்து தொட்டு தூக்கியவர் பஞ்சு அருணாச்சலம். சினிமாவில் இளையராஜாவை தொட்டு தூக்கியவர் பஞ்சு அருணாச்சலம் என்று பேசியதும் குறிப்பிடதக்கது.