தீராத பகை … இளையராஜாவை இழிவு படுத்துவது இது முதல் முறை அல்ல… பின்னனி இது தானம்..

0
Follow on Google News

சுப்பிரமணியபுரம் படத்தின் இசை அமைப்பாளராக அறியப்பட்ட ஜேம்ஸ் வசந்தன், அந்த ஒரு படத்தை தவிர்த்து பெரிதாக அவருடைய இசை ஜொலிக்க வில்லை. சுப்ரமணியபுரம் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் இளையராஜா இசையின் சாயலில் தான் இருக்கும், அந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால்’ பாடலின் ராகம் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடலைப் போன்ற மெட்டு என்று பாமரனும் கூறி விடுவான். ‘மதுரை குலுங்க குலுங்க’ -பாடலின் கிராமியத் தனமான இசையும் இசைஞானியின் சாயல் இருந்ததை உணர முடியும்.

இப்படி இளையராஜா சாயலில் இசை அமைத்து சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட ஜேம்ஸ் வசந்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில், இளையராஜா மாதிரி ஒரு மட்டமான ஆளை பார்க்கவே முடியாது, இளையராஜா ஒரு மனிதனாக மிகவும் மட்டமான ஒரு நபர், ஏனென்றால் கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாமல். முதிர்ச்சி உள்ளவன் இப்படி பேசுவானா, ஒரு பண்பு உள்ளவன் எவனாவது இப்படி பேசுவானா,

அவரின் ஈன புத்தி இருக்கே.? அதாவது நீங்கள் எல்லாம் தப்பு, நான் தான் சரி என்று என்று நினைக்கிற அந்த எண்ணம் இருக்கு இல்ல, அதனால தான் அவரை மட்டமான ஆட்கள் என்று சொல்கிறோம் என ஜேம்ஸ் வசந்த் ஒருமையில் இளையராஜாவை மிக கடுமையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இளையராஜாவை ஜேம்ஸ் வசந்த் கடுமையாக விமர்சனம் செய்து வருவது இது முதல் முறை கிடையாது.

இதற்கு முன்பு பிண்ணனி பாடகர் SPB இறந்தபோது, இளையராஜா இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார் அப்போது, “பாலு.. உனக்காகக் காத்திருக்கிறேன் சீக்கிரம் வா” என்று நான் பேசிய வீடியோவை எஸ்.பி.பிக்கு நினைவு வந்தபோது எஸ்.பி.சரண் போட்டுக் காட்டியிருக்கிறான். உடனே கண் எல்லாம் கலங்கி, போனை வாங்கி எனக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். யாரையாவது பார்க்க வேண்டுமா என்று எஸ்.பி.பியிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது “ராஜாவை வரச் சொல்லு” என்று சொல்லியிருக்கிறார்.

இந்த ஒரு வார்த்தை போதாதா? அவருடைய மனதில் எனக்கு என்ன இடம் கொடுத்திருந்தார் என்றால், என்னை மட்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கும். அந்த மாதிரியான நட்பு எங்களுடையது. என்னுடைய ஒவ்வொரு மேடையிலும் அவரும் இருக்கிறார் என்பது தான் சத்தியம் என எஸ்பிபி உடன் இருந்த தனது நட்பை பற்றி இரங்கல் செய்தியில் இசைஞானி இளையராஜா பகிர்ந்து கொண்டார்.

ஆனால் இந்த நிகழ்வு நடந்து அடுத்த நாள்,இளையராஜாவுக்கு எதிராக ஜேம்ஸ் வசந்த் வெளியிட்ட கருத்து மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, அதில் ஜேம்ஸ் வசந்த் தனது முகநூல் பக்கத்தில், ஒருவன் உயிருடன் இருக்கும்போது அவனை நோகடித்து, புண்படுத்திவிட்டு இப்போது அவன் இல்லையென்று ஆனவுடன், அவனைப்போல் ஒருவன் இல்லை என்று பேசுவது என்ன ஒரு மாய்மாலம்! நேற்று SPB நினைவு தினம் என பதிவு செய்திருந்த ஒரு பதிவு இளையராஜாவை தான் ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம் செய்கிறார் என கடும் சர்ச்சை அப்போது ஏற்படுத்தியது.

இந்நிலையில் இளையராஜா மீது ஜேம்ஸ் வசந்தனுக்கு எதற்கு இந்த கோபம், என்கிற தகவல் வெளியாகியுள்ளது. சுப்பிரமணியபுரம் படத்தில் வரும் ஒரு காட்சியில் சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் என்கிற பாடல் ஒழிக்கும். இளையராஜா இசையில் வெளியான இந்த பாடலை இளையராஜா அனுமதி இல்லாமல் அந்த படத்தில் இடம்பெற செய்ததற்காக இளையராஜா தரப்பில் இருந்து அந்த படத்திற்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

பொது வாக ஒரு இசை அமைப்பாளருக்கு சொந்தமான பாடலை வேறு ஒரு படத்தில் பயன்படுத்தினால், அந்த பாடலுக்கு சொந்தமான இசை அமைப்பாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், ஆனால் இந்த அடிப்படை கூட தெரியாமல் இளையராஜா அனுமதி இல்லாமல் சுப்பிரமணியபுரம் படத்தில் பயன்படுத்திய ஜேம்ஸ் வசந்தன், அதனால் இளையராஜா தரப்பில் இருந்து வந்த நோட்டிஸ் காரணமாக, அப்போது இருந்து இளையராஜா மீது ஜேம்ஸ் வசந்தனுக்கு வன்மம் இருந்து வந்ததாகவும், அதன் வெளிப்பாடு தான் இது போன்று இளையராஜாவை ஒருமையில் கடுமையாக ஜேம்ஸ் வசந்தன் பேசுவதற்கு காரணம் என கூறப்படுகிறது.