தமிழ் சினிமாவில் முதல் முதலில் படலாசிரியராக கவிஞர் வைரமுத்துவை தன் இசை மூலம் அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. தொடர்ந்து சுமார் 7 வருடங்களை இருவரும் இணைத்து பணியாற்றி பல ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் வைரமுத்து பிசியான கவிஞராக உயர்ந்த பிறகு பாடல் வரிகளை திருத்தம் செய்ய இளையராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தால் சரியான நேரத்துக்கு வைரமுத்து செல்வதில்லை என கூறப்படுகிறது.
இதன் பின்பு இளையராஜா தானாகவே பாடல் வரிகளை திருத்தம் செய்துள்ளார், இது வாலி போன்ற பெரிய கவிஞர்கள் பாடல் எழுதும் போது கூட இளையராஜா திருத்தம் செய்வது வழக்கம், அந்த வகையில் இளையராஜாவின் திருத்தம் பற்றி கவிஞர் வாலி பல முறை பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் வைரமுத்துவுக்கு தனது பாடலை இளையராஜா திருத்தம் செய்வது பிடிக்கவில்லை, இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து இளையராஜா – வைரமுத்து இருவருக்குமான கருத்து வேறுபாடு ஒரு கட்டத்தில் உச்சக்கட்டம் அடைந்து இருவரும் சண்டையிட்டு பிரிந்தவர்கள் சுமார் 30 வருடங்கள் கடந்தும் இதுவரை மீண்டும் இவர்கள் இணையவில்லை. இந்த நிலையில் சமீப காலமாக இளையராஜா என்ன பேசினாலும் அது சர்ச்சையாக வெடித்து, அவருக்கு எதிரான விமர்சனம் மிக கடுமையாக எதிரொலித்து வருகிறது.
சமீபத்தில் மறைந்த இயக்குனர் மனோ பாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா, மனோ பாலா குறித்து அவர் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை தெரிவித்திருந்தார், அதில் தன்னிடம் வாய்ப்பு கேட்டு காத்திருந்த இயலுக்குனர்களில் இயக்குனர் மனோ பாலாவும் ஒருவர் என்றும், என்னுடைய வருகைக்காக கோடம்பாக்கம் பிரிட்ஜ்ல் காத்திருப்பார் என இளையராஜா பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இருந்தும் ஒரு தரப்பினர் இளையராஜாவுக்கு எதிராக மனோ பாலா விவகாரத்தில் கருத்து தெரிவித்து வந்தாலும், இளையராஜா பேசியதில் எந்த தவறும் இல்லை, ஒரு காலத்தில் தன்னிடம் வாய்ப்பு கேட்க காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களில் மனோ பாலாவும் ஒருவர் ஆனால் அப்படி இருந்தவர், எப்படி வளர்ந்துள்ளார் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் தான் இளையராஜா பேசியுள்ளார் என இளையராஜா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பொது மேடை ஒன்றி இளையராஜா குறித்து வைரமுத்து பேசிய வீடியோ ஓன்று தற்போது வைரலாகி வருகிறது, அதில். எழுத்தாளர் ஜெயகாந்தன் மகளுக்கு திருமணம் நிகழ வேண்டும் என்று அவர் விரும்பியபோது, எங்கள் மண்டபத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன், மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.
பொன்மணி மண்டபத்தில் வரவேற்பு என பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் அழைப்பு கொடுக்க சென்றிருக்கிறார். அதில் எனக்கும் அவருக்கும் தெரிந்த ஒரு இசையமைப்பாளரிடம் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றிருக்கிறார் ஜெயகாந்தன். அழைப்பிதழை வாங்கிக்கொண்டு அண்ணே அவசியம் வருகிறேன் இது நம்ம வீட்டு கல்யாணம் என அந்த இசையமைப்பாளர் ஜெயகாந்தனிடம் தெரிவிக்கின்றார்.
பின்பு திருமண அழைப்பிதழை பிரித்து உள்ளே பார்க்கிறார் அந்த இசையமைப்பாளர், அதில் மண்டபத்தின் பெயரை பார்க்கின்றார், மன்னிக்க வேண்டும் நான் வரமுடியாது என அந்த இசையமைப்பாளர் தெரிவிக்கின்றார்.அதற்கு வரவில்லை என்றால் போ, என்று சொல்லிவிட்டு கிளம்பிய ஜெயகாந்தன் திரும்பி மீண்டும் அந்த இசை அமைப்பாளரிடம் சென்று, நீதான் திருமணத்திற்கு வரப்போவது கிடையாது உனக்கு எதுக்கு பத்திரிக்கை என பிடிங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
இதை உடன் இருந்து பார்த்தவர்கள் தன்னிடம் சொன்ன தகவல் என பேசிய வைரமுத்து, வராத அவனுக்கு பத்திரிக்கை எதற்கு என்றும், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்ற கண்ணதாசன் வரிகளை வாங்கி ஜெயகாந்தனை நான் பாராட்டி கொண்டேன் என இசைஞானி இளையராஜா பெயரை குறிப்பிடாமல் பொது மேடையியில் வைரமுத்து இதற்கு முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிட்டத்தக்கது.