பணம் எல்லாம் கிடையாது… போ… போ.. இடத்தை காலி பண்ணு… இளையராஜாவுக்கு ஏற்பட்ட உச்சக்கட்ட அவமானம்…

0
Follow on Google News

ஒரு தமிழ்ப் படத்தைப் போல் தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வெற்றிகரமாக ஓடியது. சுமார் நான்கு கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இப்படம், 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது. இப்படத்திற்கு தமிழர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததற்கு காரணம் கமல்ஹாசனின் குணா படம்.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கமல்ஹாசனின் குணா படத்தில் இளையராஜா இசையில் வரும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலில் ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது’ எனும் வரியோடு தொடங்குகிறது.‌ க்ளைமேக்சில் மீண்டும் ஒருமுறை வரும் இந்த பாடல் வரி இது வரை காதல் குறித்து பாடுவதாகவே பார்க்கப்பட்டது.

அதே சமயம் ’கண்மணி அன்போடு காதலன்’’ என்ற ட்ரெண்டிங் பாடலை, இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா தரபில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மேலும் படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என்றும் அனுமதி இல்லாமல் பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த நோட்டீஸில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்திருந்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனி, “இந்தப் பாடலுக்கான உரிமையை நாங்கள் முறையாக பெற்றுள்ளோம்.

ஒரு நிறுவனம் தெலுங்கு பதிப்பின் உரிமையையும், மற்றொரு நிறுவனம் மற்ற மொழி பதிப்புக்கான உரிமையையும் பெற்றிருந்தது. பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலுக்கான உரிமையை பெற்று விட்டோம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியது.

மஞ்சுமெல் பாய்ஸ் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றதால் தனக்கு 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் கேட்கப் பட்டதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் இளையராஜாவுக்கு 60 லட்ச ரூபாய் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ தயாரிப்பாளர் இழப்பீடு வழங்கியதாக செய்திகள் ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து இளையராஜாவின் வழக்கறிஞர் கூறிய போது ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ பட குழுவினருக்கும் இளையராஜாவுக்கும் இடையே இதுவரை இழப்பீடு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் இழப்பீடு பணம் எதுவும் வழங்கப்படவில்லை’ என்றும் தெரிவித்துள்ளனர், மேலும்

குணா படத்தின் பாடல் உரிமையை பிரமிட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் ஸ்ரீதேவி மியூசிக் கார்பொரேஷன் நிறுவனத்திடம் கொடுத்து விட்டதாகவும், அவர்களிடம் இருந்தும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலுக்கான உரிமையை மஞ்சுமல் பாய்ஸ் பெற்று விட்டதாக கூறப்படும் நிலையில்,இந்த விவகாரத்தில் பத்து பைசா கூட இளையராஜாவுக்கு தரமாட்டோம், சட்டப்படி சந்திப்போம் என்பதில் மஞ்சுமல் பாய்ஸ் உறுதியாக இருப்பதாக கூறப்டுகிறது.

அந்த வகையில் மஞ்சுமல் பாய்ஸ் படம் மிக பெரிய வெற்றி பெற்ற போது, மஞ்சுமல் பாய்ஸை அழைத்து இளையராஜா பெருந்தன்மையோடு பாராட்டி இருந்தால் மரியாதையாக இருந்திருக்கும் ஆனால் என் பாடலுக்கு இழப்பீடு வேண்டும் என நீதிமன்றம் சென்றது இளையராஜாவுக்கு இந்த விவகாரம் அவமானத்தை பெற்று தரும் விதத்தில் எதிர்மறை விமர்சனம் தான் அதிகம் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது. இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.