அந்த படத்திற்கு இசையமைக்க முடியாது… இளையராஜா மறுக்க இது தான் கரணம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

0
Follow on Google News

இயக்குனர் ஞான ராஜசேகரன், இவர்கள் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். பின்பு சினிமா மீது கொண்ட மோகத்தினால் திரைப்பட இயக்குனராக சினிமாவில் உள்ளே நுழைந்தார். ஆரம்பத்தில் குறும்படங்கள் எடுத்து வந்த இவர், மோகமுள் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், முதல் படமே இளையராஜா இசை அமைக்கும் பாக்கியம் ஞான ராஜசேகரனுக்கு கிடைத்தது. அதன் பின்பு தொடர்ந்து இவருடைய படத்திற்கு இளையயராஜா இசை அமைத்து வந்தார்.

ஞான ராஜசேகரன் இயக்கத்தில் பாரதி படத்தின் இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பாராட்டும் வகையில் இருந்தது, இந்நிலையில் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளியான பெரியார் படத்தில் இளையராஜா இசையமைக்க மறுத்ததற்காக காரணத்தை அந்த ஞான ராஜசேகரன் தெரிவித்துள்ளார், அதில் அவர் பேசியதாவது. என்னுடைய படத்திலே பாரதி படத்தில் இசைஞானி இளையராஜா இசை ஒரு அற்புதமான கோர்வை.

இளையராஜா அவருடைய இசையில் பல அதிசயங்கள் அவரால் செய்ய முடிந்தது. என்னுடைய இயக்கத்தில் வெளியான பாரதி படத்தின் பின்னணி இசை, பாடல்கள் என அனைத்துமே பாராட்டுகளை பெற்றது. அவ்வளவு அற்புதமாக இசையமைத்திருந்தார் இளையராஜா. பாரதி படத்திற்கு டியூன் போடுவதற்காக நாங்கள் கேரளா சென்றிருந்தோம், அந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று, படகு போன்ற ஒரு வீட்டில் இளையராஜா இசையமைத்தார்.

அதை நாங்கள் பக்கத்தில் இருந்து பார்த்த அற்புதமான வாய்ப்பு. மேலும் அவருடைய பழைய படங்களின் பாடல்களை எங்களுக்கு பாடி காட்டினார். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக எங்களுக்கு இருந்தது பாரதி படத்தில் இடம்பெற்ற “நிற்பதுவே நடப்பதுவே” என்கின்ற பாடலை பாடலின் சுச்சுவேசனை நான் சொன்ன அடுத்த ஐந்து நிமிடத்தில் இந்தப் பாட்டுக்கான மெட்டுகளை போட்டுக் கொடுத்தார். அவரிடம் வேலை செய்துவிட்டு வேறு ஒரு இசையமைப்பாளர் உடன் வேலை செய்வது மிகவும் கடினமாக இருந்தது.

இளையராஜா நமது கண் முன்னாலே இசையமைப்பதால், அந்த இசை உருவாக்குவதை நம் காண முடியும். ஆனால் மற்றவர்கள் நம் ஒரு சிச்சுவேஷன் சொன்னால் அவர்கள் மறுநாள் வாங்க ட்யூன் ரெடி பண்ணி வைத்திருக்கிறோம் என்று சொல்வார்கள். பாரதி படத்தை முடித்துவிட்டு இளையராஜா பிறந்த தினத்தில் அவரை சந்தித்தோம், அப்போது அடுத்து பெரியார் பற்றிய படம் எடுக்கப் போவதாக நான் சொன்னோம்.

அதற்கு இளையராஜா நீங்கள் பணம் தரப் போகிறீர்கள், நான் இசை அமைக்க போகிறேன், இதில் என்ன இருக்கின்றது என்று எங்களிடம் தெரிவித்தார். அவரின் இந்த பேச்சை கேட்டு பெரியார் படத்துக்கு இசையமைக்க தயாராகி விட்டார் என்று தான் நினைத்தேன். இதனைத் தொடர்ந்து நானும் எடிட்டர் லெனினும் இளையராஜாவை நேரில் சந்திக்க சென்றோம், பெரியார் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார் படத்தை தொடங்க இருக்கின்றோம்.

அதனால் நீங்கள் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டோம் அதற்கு இளையராஜா என் நாவில் சரஸ்வதி இருக்கின்றார், நான் எப்படி பெரியார் படத்திற்கு இசையமைக்க முடியும்.?அவர் கடவுள் இல்லை என்று சொல்லி இருக்கிறார். நான் கடவுள் இருக்கு என்று நம்புகின்றவன், எப்படி இசையமைக்க முடியும் என்று இளையராஜா சொன்னதும், அதை நான் ஏற்றுக் கொண்டேன். அது அவருடைய உரிமை,ஒரு படத்திற்கு இசை அமைக்க வேண்டுமா.? இல்லையா.? என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்த படத்திற்கு இளையராஜா இசையை நாம் மிஸ் பண்ணப் போகிறோம் என்கின்ற வருத்தம் எனக்கு இருந்தது. இருந்தாலும் இளையராஜாவின் கருத்தை நான் ஏற்றுக் கொண்டேன் அவருடைய கொள்கைக்கு மதிப்பளித்து. நாங்கள் எதுவுமே பேசாமல் வந்து விட்டோம் என பெரியார் படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்காமல் மறுத்ததற்கான காரணத்தை இயக்குனர் ஞான ராஜா சேகர் இதற்கு முன்பு பேசிய வீடியோ ஓன்று தற்பொழுது இளையயராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழக்கப்பட்டுள்ள இந்த சுழலில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.

சொல்லி அடித்தது போல் சூர்யா முகத்தில் கரியை பூசிய ஹரி… வருத்தத்தில் சூர்யா… என்ன நடந்தது தெரியுமா.?