கங்கை அமரனின் திறமையை பார்த்து உனக்குள் ஒரு திறமை இருக்கிறது, நீயும் இசை அமைப்பாளராக வரவேண்டும் என மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன், கங்கை அமரனை வற்புறுத்துகிறார். அதற்கு கங்கை அமரன் இல்லை, அண்ணன் இளையராஜா கோவித்துக் கொள்வார் என மறுக்கிறார். ஆனால் அதற்கு மலேசியா வாசுதேவன் அண்ணன் தான் ரொம்ப பிசியா இருக்கிறார் இல்ல, நீ ஒரு படம் பண்ணுப்பா, என வற்புறுத்தி கங்கை அமரனை இசை அமைப்பாளராக கொண்டு வந்தவர் மலேசியா வாசுதேவன்.
அதேபோன்று இளையராஜா இசையமைக்கும் போது கவிஞர்கள் திடீரென்று வரவில்லை என்றால் கங்கை அமரனை பாடல் எழுத சொல்லி இருக்கிறார் இளையராஜா. அப்படி கங்கை அமரன் எழுதிய பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் கங்கை அமரன் ஒரு பாடல் ஆசிரியராக, இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் கரகாட்டக்காரன், கோவில் காளை போன்ற படங்களை இயக்கி ஒரு இயக்குனராகவும் புகழ் பெற்றவர் கங்கை அமரன்.
குறிப்பாக நடிகர் ராமராஜனை கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் அன்றைய காலகட்டத்தில் ரஜினி , கமலை விட அதிக சம்பளம் ராமராஜன் வாங்குவதற்கு காரணமாக இருந்தது கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் படம். இந்நிலையில் கங்கை அமரன் வளர்ச்சி மீது இளையராஜாவுக்கு ஒரு வித பொறாமை இருந்தது என்றும் அது தான் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிவதற்காக காரணமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.
அப்படி இளையராஜா – கங்கை அமரன் இருவரும் பிரிந்து பல வருடங்களும் கழித்து தற்போது மீண்டும் இணைந்தாலும் கூட, இவர்கள் இருவரும் பிரிந்த காலகட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்தில் பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் அதில், இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மறைந்த போது அவருடைய உடல் தி நகர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அந்த நேரங்களில் பெரும்பாலான மீடியாக்கள் அங்கே வந்து குவிந்திருப்பதைக் கூட இளையராஜா விருப்பவில்லை. இந்த நிலையில் ஒவ்வொருவராக வந்து இளையராஜாவின் மனைவிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்று கொண்டிருக்கையில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கண்ணீர் விட்டு கதறியபடியே தன்னுடைய அண்ணிக்கு அஞ்சலி செலுத்த வருகிறார். ஆனால் அங்கிருந்த இளையராஜா கையை காட்டி உள்ளே வராதே என திரும்பி போக சொல்கிறார்.
இந்த நிலையில் அங்கே இருந்த சினிமா துறையைச் சார்ந்த மூத்தவர்கள் இளையராஜாவிடம் சமாதானம் செய்கிறார்கள், இப்படி எல்லாம் செய்ய கூடாது, என்னதான் உங்களுக்குள் பிரச்சனை இருந்தாலும், ஒரு இறப்புக்கு வந்தவரை தடுத்து நிறுத்தக்கூடாது என இளையராஜாவிடம் சமாதானம் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் மறுபக்கம் கங்கை அமரன் தன்னுடைய அண்ணி மறைவுக்கு தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறுகிறார்.
இளையராஜா மனைவி ஜீவா இளையராஜாவுக்கு சொந்த அக்கா மகள். அந்த வகையில் இளையராஜாவின் தாயார் மறைவுக்கு பின்பு இளையராஜாவின் தம்பி கங்கை அமரனை ஒரு தாய் போன்று சாப்பாடு போட்டு கவனித்துக் கொண்டவர் இளையராஜாவின் மனைவி ஜீவா. அந்த வகையில் அண்ணி முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்து விட வேண்டும் என கண்ணீர் விட்டு கதறுகிறார் கங்கை அமரன்.
ஆனால் இளையராஜா அதற்கு அனுமதிக்காமல் இருந்த நிலையில், அங்கே இருந்த மூத்த சினிமா துறையைச் சார்ந்தவர்கள் ஒரு வழியாக இளையராஜாவை சமாதானம் செய்து, ஒரு வழியாக இளையராஜா வேண்டா வெறுப்பாக முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொள்ள, கங்கை அமரன் உள்ளே சென்று தன்னுடைய அண்ணி உடலை பார்த்து கதறி அழுத காட்சி அங்கே இருந்தவர்களை உறுகுலைய வைத்தது என கூற சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.