மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை அருகே பனையூர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது, இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள்,வெளிமாவட்டம், மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்தும் பலரும் சென்னைக்கு வந்திருந்தனர். ஆனால் டிக்கெட் வாங்கிய பலரும் நிகழ்ச்சி நடந்த இடத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இதற்கு காரணம் நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைக்கு அதிகமான டிக்கெட்களை விற்பனை செய்ததின் விளைவு, அரங்கின் உள்ளே போதிய இருக்கை வசதி இல்லாதால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பல தூரத்தில் இருந்து பயணித்து நிகழ்ச்சியை பார்க்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் வெளியேற்றப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
இதனால் டிக்கெட் வாங்கியும் உள்ளே அனுமதிக்கப்படாமல் பாதிக்கப்பட்டவர்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் இந்த நிகழ்வு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகச்சிக்கு வந்தவர்கால் மட்டுமில்லை, நிகழ்ச்சி நடைபெறும் அருகே உள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இப்படி ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கை முதல் பார்க்கிங் வரையில் மக்கள் மிக பெரிய சிரமத்தை எதிர் நோக்க நேரிட்டது.இதேபோல், நிகழ்ச்சி நடந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டு கூட்டம் அதிகமாக இருந்ததால் பலரும் நெரிசலில் சிக்கித் தவித்தனர். உரிய டிக்கெட்டுகள் இருந்தும் பலர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் இந்த கூட்டத்தில் இருந்து தப்பித்து வெளியேறினால் போதும் என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டனர் காசு கொடுத்து டிக்கெட் எடுத்து வந்த மக்கள்.
குறிப்பாக நிகழ்ச்சியை பார்க்க வந்த பெண்கள், குழந்தைகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட் நிலையில், இசை நிகழ்ச்சி அரங்கில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை எனவும், இருக்கை வசதியின் எண்ணிக்கையை விட இரு மடங்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது, இதனால் கடந்த இரண்டு நாட்களாக மிக கடுமையான விமர்சனங்கள் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக எழுந்து வருகிறது.
இந்நிலையில் தன்னுடைய தந்தை ஏ.ஆர்.ரகுமான் குறித்து அவதூறாக பேசுவதற்கு முன் அவர் மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறார் என யோசித்து பேசுங்கள் என இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் தெரிவித்துள்ளது மேலும் இந்த விவகாரம் விவாத பொருளாக மாறியுள்ளது. ரகுமானின் மகள் அவருடைய சமூக வலைத்தளத்தில், இசை நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததை போல சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
சிலர் இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைத்திற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் 100% காரணம். ஆயினும் ஏ.ஆர்.ரகுமான் அதற்காக முழு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார் என்றும், மேலும் ஏ.ஆர்.ரகுமான், 2015 பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு சென்னை மதுரை கோவை மாவட்டங்களில் நெஞ்சே எழு என்ற இசை நிகழ்ச்சி நடத்தியவர்,
கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு உதவியவர், திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தியவர். அவர் குறித்து அவதூறாக பேசும் முன் இதனையெல்லாம் யோசித்து பேசுங்கள் என ரகுமானின் மகள் பதிவிட்டுள்ளார் தற்பொழுது விவாத பொருளாக மாறியுள்ள நிலையில்,
ஏ.ஆர்.ரகுமான் நடத்திய நிகழ்ச்சியில் மக்கள் பதிப்படைத்ததற்கும், இதற்கு முன்பு இயற்கை பேரிடர் நடந்த பொது ஏ.ஆர் ரகுமான் உதவி செய்தததற்கு என்ன சம்பந்தம், அங்கே ஏ.ஆர்,ரகுமான் நிகழ்ச்சியை பார்க்க டிக்கெட் எடுத்து பார்க்க வந்து பதிவுக்கப்பட்டவர்களும் இயற்கை பேரிடரில் போது உதவி செய்த்தவர்கள் தான் என்பதை புரிந்து கொண்டு இது போன்ற கருத்துக்களை ஏ.ஆர்.ரகுமான் மகள் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதே நேரத்தில் இயற்கை பேரிடரில் போது உதவ உங்க அப்பாவுக்கு எங்கிருந்து வந்தது.? இசை நிகழ்ச்சி நடத்தி மக்களிடம் வசூல் செய்து மக்களுக்கு கொடுத்துள்ளார் என பலரும் ரகுமானின் மகளுக்கு பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடதக்கது.