20 கோடி வரை வசூல்…ஏ ஆர் ரகுமானின் இந்த பேச்சு சரியில்லை… முக்கிய சினிமா பிரபலம் ஆவேசம்…

0
Follow on Google News

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க்க சென்றவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மிக பெரிய விவாத பொருளாக மாறி, கடும் எதிப்புகளை ஏ.ஆர்.ரகுமான் பெற்று வருகிறார், ஆயிரக்கணக்கில் டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைதளத்தில் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இசையை ரசிக்க வந்த ரசிகர்கள் மிக எங்களுக்கு ஒரு மோசமான அனுபவம் என கொந்தளித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். மேலும் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவைகளை பகிர்ந்து வரும் நிலையில். குறிப்பாக பெண்கள் பலரும் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கிய தங்களின் உயிர் போயிருக்கும் என்பது போல பேட்டி அளித்து வருவது ஏ.ஆர்.ரகுமானின் நிகழ்ச்சி தோல்வியை தழுவியுள்ளது என்பதை காட்டுகிறது.

இதைவிட கொடுமை என்னவென்றால் அங்கு ஏற்பட்ட தள்ளு முள்ளில் பலருக்கு காயமும் ஏற்பட்டிருக்கிறது. சிலர் உயிர் தப்பினால் போதும் என்ற பயத்தில் நிகழ்ச்சியை பார்க்காமலேயே வெளியேறி இருக்கின்றனர். அந்த அளவுக்கு ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரியை அவோளோடு பார்க்க வந்த ரசிகர்களை அங்கிருந்து உயிர் பிழைத்து தப்பித்து ஓடினால் போதும் என்கிற சூழலுக்கு தள்ளியுள்ளது ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி.

இந்த நிலையில் நிகழ்ச்சி தொடர்பாக பேசிய இசையமைப்பாளரும், இசையமைப்பாளர் சங்கத் தலைவருமான தீனா, “இந்த நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள்தான் பொறுப்பு. நிகழ்ச்சிக்கு எத்தனை டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்பன போன்ற எந்தத் திட்டமிடலும் அவர்களிடத்தில் இல்லை என தெரிவித்தவர்.

மேலும் இதனால்தான் இந்தக் குழப்பம் கூச்சல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் கான்வாய்க்கு கூட அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் இது ஒரு ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஒரு மிகப்பெரிய பாடம். இந்த நிகழ்ச்சியில் நானும் இருந்தேன். அவர் தமிழர்களை ஏமாற்றிவிட்டார் எனறுதான் சொல்வேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் டாய்லெட் மற்றும் தண்ணீர் வசதி அவசியம். ஆனால் இதெல்லாம் அங்கு இல்லை என பரபரப்பு குற்றசாட்டுகளை தெரிவித்த இசை அமைப்பாளர் தீனா.

இந்த நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட ரூ.20 கோடி வரை வசூலாகி உள்ளது. ஆக, இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என தெரிவித்துள்ள தீனா, தொடர்ந்து, “ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு சம்பந்தம் இல்லை; அது எனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார். இது பொறுப்பற்ற பேச்சு. இதுபோன்ற பேச்சுகள் கூடாது. ரசிகர்கள் அவரை நம்பிதான் வந்தார்கள்” என இசை அமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கடுமையான கண்டன குரல் ஒலித்து வரும் நிலையில் இது குறித்து ஏ,ஆர்,ரகுமான் அவருடைய சமூக வலைதள பக்கத்தில், மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட் நகலை பகிருமாறு ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் தனது X தளத்தில், “அன்பான சென்னை மக்களே, டிக்கெட் வைத்திருந்தும் துரதிருஷ்டவசமான சூழ்நிலையால் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் நுழையாதோர் உங்கள் டிக்கெட் நகலை [email protected] அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழு உங்களுக்கு விரைவில் பதிலளிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.