சமீப காலமாக இளையராஜா பற்றிய பேச்சுகளும் விவாதங்களும் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ஏனெனில் இளையராஜா அவரது அனுமதி இன்றி அவர் உருவாக்கிய பாடல்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே தன் அனுமதியின்றி இரண்டு இசை நிறுவனங்கள் தனது இசையை பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த இளையராஜா, தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராட்சி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் கூலி. பல கோடிகளைக் கொட்டி சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டைட்டில் டீசரை பட குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். ரஜினி ரசிகர்கள் மத்தியில் இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால், இந்த டீசரில் தன்னுடைய அனுமதி இன்றி தன்னுடைய இசையை பயன்படுத்தி இருப்பதாக கூறி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து இணையத்தில் பல்வேறு தரப்பு ரசிகர்கள் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இப்படியான சூழலில் பிரபல சினிமா இயக்குனர் பிரவீன் காந்தி அவர்கள் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார். இது பல்வேறு ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ரட்சகன், ஜோடி போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் பிரவீன் காந்தி.
தற்போது இளையராஜா விவகாரம் குறித்து இயக்குனர் பிரவீன் காந்தி பேசுகையில், “ரட்சகன் படத்தை பொறுத்த வரைக்கும் ஹிந்தி பட பானியில் தான் விஷுவல் இருக்கும். இந்த படத்தை தமிழ் ஹிந்தி தெலுங்கு என மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தேன். குறிப்பாக ஹிந்தியில் வெளியிட்டால் எனக்கு மிகப் பெரிய மார்க்கெட் கிடைக்கும் என்று கனவு கண்டிருந்தேன்.
ஆனால், ஏ ஆர் ரகுமான் அதை சுக்குநூறாக உடைத்து விட்டார். அந்த சமயத்தில் அப்படத்தில் ஹிந்தி ரைட் ஏ ஆர் ரகுமானிடம் இருந்தது. அவர் ஹிந்தியில் ரிலீஸ் செய்ய முடியாது என்று தவறாக கூறிவிட்டார். எனவே அவரை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் இந்து முன்னணி ரகுமானுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் ரட்சகன் படத்தை நான் ஹிந்தியில் வெளியிட்டு இருந்தால், அடுத்தடுத்து நிறைய படங்களை ஹிந்தியில் பண்ணி இருப்பேன். இப்போது இயக்குனர் அட்லி மாதிரியே நானும் வேற லெவலுக்கு வந்திருப்பேன் ” என்று கூறியிருக்கிறார். பிரவீன் காந்தியின்இந்த பேச்சு இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் இருப்பதாகவும் ஆனால் ஏ.ஆர்.ரகுமானால் தன்னுடைய சினிமா வாழ்க்கையே போச்சு என்பது போன்று ரகுமானை வஞ்சித்து பேசுவது போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.