திருடி மியூசிக் போட்டு வசமாக சிக்கிய அனிரூத்… இதெல்லாம் ஒரு பொழப்பு… அந்த விஷயத்தில் ராஜா ராஜாதான்..

0
Follow on Google News

தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், சமீப காலமாக தமிழ் மட்டுமின்றி இந்தி தெலுங்கு போன்ற பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அனிருத் திசையமைத்த பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தாலும், அவர் நிறைய பாடல்களை காப்பி அடித்து இசையமைத்திருக்கிறார் என்று ரசிகர்கள் அடிக்கடி அவர் மீது குற்றச்சாட்டு வைப்பது உண்டு.

அந்த வகையில், மீண்டும் காப்பி அடித்து இசையமைத்தது அப்பட்டமாக தெரிவதால் அனிருத் மாட்டிக்கொண்டார். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் பெரிய அளவிலான பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை தன் வசம் வைத்திருக்கிறார் அனிருத். குறிப்பாக நடிகர் அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் கூலி, முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் sk 23 உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

இன்னும் நிறைய படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.சொல்லப்போனால் அனிருத் காட்டில் அடை மழை தான். எண்பதுகளில் தமிழ் சினிமாவை தன் இசையால் கட்டி இழுத்த இளையராஜாவைப் போல, இந்த காலகட்டம் அனிருத்துக்கு பொற்காலமாக இருக்கிறது. பெரும்பாலான இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு அனிருத் பாடல்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்புவதாலேயே,

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்ற நிலையில், தமிழ் ஹிந்தி தெலுங்கு என வெவ்வேறு மொழி படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக இருக்கிறார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் நடிக்கும் தேவரா படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் chuttamalle பாடல் நேற்று யூடியூபில் வெளியிடப்பட்டது.

ஜான்வி கபூர் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் இந்த பாடல் இப்போது வரை 1.3கோடி பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதே சமயம், இந்தப் பாடலுக்கு அனிருத் மியூசிக்கை காப்பி அடித்து போட்டு இருக்கிறார் என்றும் இனையாவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு சிங்கள பாடகி யோகானி பாடிய Manike mage hithe பாடல் உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சமூக வலைத்தளங்களில் இந்தப் பாடல் படு வேகமாக வைரலானது. தற்போது, தேவரா படத்தில் இடம்பெற்றிருக்கும் chuttamalle பாடலின் மியூசிக்கும் அதே டியூனில் இருப்பதாகவும், அனிருத் அந்த பாடலை அப்படியே காப்பி அடித்து இதில் இசையமைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே லியோ படத்தில் இடம் பெற்றுள்ள life of ordinary man பாடலுக்கும் அனிருத் மீது இதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப இசையமைபாளராக அனிருத் இருந்தாலும், ஒரு வாரத்திற்கு கூட தாக்கு பிடிக்க மாட்டேன் என்கிறது, ஆனால் பல ஆயிரம் பாடலுக்கு இசை அமைத்த இளையராஜாவின் இசை இன்றும் மனதிற்கு அமைதியை தந்து காலத்துக்கு அழியாமல் நின்று கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் பல ஆயிரம் பாடலுக்கு இளையராஜா இசை அமைத்த எந்த ஒரு பாடலும் காப்பி அடித்தது என்கிற குற்றசாட்டு கிடையாது, ஆனால் காப்பி அடித்து பாடல் போடும் அனிருத்துக்கு ராக் ஸ்டார் என்கிற பட்டமும் கோடி கோடியாக சம்பளம் வேறு என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.