ஐஸ்வர்யா வாழ்க்கையில் விளையாடி அத்தை லதா குடும்பத்தை நாசமாக்கிய அனிருத்..! என்ன செய்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தம்பி மகன் தான் இசை அமைப்பாளர் அனிருத், இவரின் அத்தை பெண்கள் தான் ரஜினிகாந்த் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா, இதில் சௌந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில்,தற்போது ஐஸ்வர்யாவும் தனது கணவர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதற்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யா மாமா மகன் அனிருத் தான் என கூறபடுகிறது. தனுஷ் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 3 படத்தில் மனைவி ஐஸ்வர்யாவை இயக்குனராக அறிமுகம் செய்தார், அதே போன்று மனைவியின் உறவினரான அனிருத்தை இசை அமைப்பாளராக இந்த படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தில் இருந்து அனிருத் மற்றும் தனுஷ் நெருக்கமாக பழகி வந்தனர்.

அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு மது அருந்துவதும், பெண்களிடம் நெருங்கி பழகுவது என தனுஷ் தற்போது செய்யும் வேலையை அப்போதே செய்து வந்துள்ளார். ஐஸ்வர்யா உடன் நெருங்கி பழகும் அவரின் தோழிகளிடம் நட்பை ஏற்படுத்தி கொண்டு பின்பு அவர்களிடம் தனது வித்தைகளை காண்பித்துள்ளார், அப்படி தான் ஐஸ்வர்யாவின் தோழி நடிகை ஆண்ட்ரியாவை தன் வசப்படுத்தியுள்ளார் அனிரூத் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 3 படத்தில் நடிக்கும் வரை எந்த ஒரு கிசு கிசுவில் சிக்காமல் இருந்து வந்த தனுஷ், இந்த படத்தில் அனிருத் உடன் பணியாற்றிய போதே அவருடன் இனைந்து மது அருந்துவது பின் அனிருத் உடன் சேர்ந்து நடிகைகளை உஷார் செய்ய தொடங்கியுள்ளார். இப்படி தான் ஏற்கனவே அனிருத்துக்கு உஷாரான நடிகை ஆண்ட்ரியாவை தனுஷ் உஷார் செய்ய அனிருத் உதவியதாக கூறபடுகிறது. இப்படி தனுஷுக்கு நடிகைகளை உஷார் செய்யும் வித்தைகளை கற்று கொடுத்த குரு அனிருத் என கூறப்படுகிறது.

இதன் பின்பு தான், சுருதி ஹாசன் தொடங்கி சமந்தா வரை சக நடிகைகளிடம் தனது சாகசத்தை காட்ட தொடங்கியுள்ளார், இதில் நடிகை ஆண்ட்ரியா, எமி ஜாக்சன் போன்ற நடிகைகளை அனிருத் மற்றும் தனுஷ் இருவருமே உஷார் செய்ததாக கூறபடுகிறது. ஒரு கட்டத்தில் அனிருத் மற்றும் தனுஷ் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தாலும், சக நடிகைகளுடன் மது அருந்துவது என கிசு கிசுவில் தொடர்ந்து சிக்கி அனிருத் கற்று கொடுத்த வித்தைகளை செய்து வந்துள்ளார் தனுஷ்.

இந்நிலையில் ஐஸ்வர்யா- தனுஷ் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ள நிலையில், அனிருத் உடன் தனுஷ் இணைந்த பின்பு தான் நடிகைகள் உடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வந்துள்ளார். இப்படி தனுஷை தவறான பாதைக்கு அழைத்து சென்று ஐஸ்வர்யா குடும்பத்தில் விளையாடி சொந்த அத்தை லதா குடும்பத்தை அனிருத் நாசம் செய்துவிட்டார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.