ஒரே படத்தில் இரண்டு ஹீரோவாக நடிக்கும் அனிருத் – லோகேஷ் கனகராஜ். இயக்குனர் யார் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு அறிவு இரட்டையர்களான இவர்கள் பல படங்களுக்கு ஸ்டாண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்கள், மெட்ராஸ், கபாலி, கைதி , சார்பட்டா பரம்பரை, கே ஜி எஃப் ,கே ஜி எஃப் 2, மாஸ்டர் விக்ரம் உள்ளிட்ட ஏராளமான மெகா ஹிட் படங்களுக்கு ஸ்டண்ட் கலைஞர்களாக பணியாற்றியுள்ளார்கள்.

இவர்கள் ஏற்கனவே நடிகர் ராகவா லாரன்ஸ் வைத்து ஒரு புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கினார்கள், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் நீண்ட நாட்களாகவே பிரபல மாஸ்டர்களான இரட்டையர்கள் அன்பு அறிவு இருவருக்கும் இயக்குனராக வேண்டும் என்று ஆசை இருந்து வந்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது தாங்கள் இயக்கம் படத்தில் நடிக்க வைப்பதற்காக அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரையும் சந்தித்து சமீபத்தில் பேசியுள்ளார்கள், அவர்களும் படத்தின் கதையைக் கேட்டு ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இந்த ப்ராஜெக்ட் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் நடிக்கும் அன்பு அறிவு இயக்க இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சிங்கப்பூர் சலூன் என்கின்ற படத்தில் கேமியோ ரோல் செய்யும் லோகேஷ் கனகராஜ் தற்போது ஹீரோவாக ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு அறிவு இயக்கும் படங்களில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் இருவருக்கும் சமமான அளவு ஹீரோக்கான கதாபாத்திரம் கதையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா மும்பை வீட்டில் ஹிந்தியா.? இது தான் சூர்யாவின் தமிழ் பற்றா.? உண்மை என்ன.?