ஏ.ஆர்.ரகுமானின் இந்த செயல் படு மோசம்… ஏன் முகத்தை கட்ட பயம்… வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்..

0
Follow on Google News

ஏ. ஆர் ரஹ்மான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இசிஆர் பனையூரில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்து போலீசார் ஏற்கனவே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதன்காரணமாக அன்று மதியம் முதல் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிகழ்ச்சியில் சில்வர், கோல்டு, பிளாட்டினம் என பல்வேறு முறையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.

இதில் பலர் லட்சக்கணக்கில் தங்களது குடும்பத்துடன் வந்து பார்க்க டிக்கெட் எடுத்திருந்தனர். 20 ஆயிரம் டிக்கெட் என வழங்கிய நிலையில் மைதானத்திற்குள் 45 ஆயிரம் பேர் உள்ளே அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதில் பலர் சிக்கி மூச்சுவிட முடியாமல் திணறினர். லட்சக்கணக்கில் டிக்கெட் எடுத்தும் உள்ளே அனுமதிக்காததால் பலர் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் பார்க்கிங் வசதி இல்லாததால் இசிஆர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் முதல்-அமைச்சர் வாகனமும் சிக்கியதால் அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய சர்ச்சையானது. இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலரும் இது தொடர்பாக புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மான் இதற்கு நானே பலிஆடாக ஆகிறேன் என பதிவிட்டார். இதனைத்தொடர்ந்து தனியார் நிறுவனம் சார்பில் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காணாத மக்கள் தங்களது இமெயில் முகவரிக்கு உங்களது டிக்கெட் அனுப்பி வைத்தால் பணம் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இமெயில் அனுப்பியவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டதாக சமூக வலைத்தள பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியின் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் தற்போது ஏ ஆர் ரகுமானை வறுத்தெடுத்து உள்ளார். ஏற்கனவே மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி சர்ச்சையான போதே, தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வந்தார் ப்ளூ சட்டை மாறன். இதனையடுத்து தற்போது அவர், “மறக்குமா நெஞ்சம்? நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட ரசிகர்களின் குரலைக் கேட்க ஏஆர் ரஹ்மான் தயாராக இல்லை” என விமர்சித்துள்ளார்.

மேலும், “ரசிகர்கள் உங்களிடம் இருந்து, ஒரு வீடியோவை தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நீங்களோ அமைதியாகவே இருக்குறீர்கள். ‘தி இந்து’ பத்திரிகைக்கு ஒரு பேட்டி கொடுத்ததோடு, இரண்டு ட்விட்டர் போஸ்ட் மட்டுமே போட்டிருந்தீர்கள். உங்கள் இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டர் பக்கங்களில் வீடியோ ரசிகர்களுக்காக வீடியோ போடுவதை தடுப்பது எது?.

அங்கே ஏன் கமெண்ட்ஸ் செக்‌ஷனை முடக்கி வைத்துள்ளீர்கள்.? டிக்கெட்டுக்கான பணத்தைத் திரும்ப கொடுத்துவிட்டால் அவர்களின் வலியைக் குணப்படுத்திவிட முடியாது என்பதை நீங்கள் நன்றாக புரிந்துகொண்டீர்கள். ஆனால், நீங்கள் ரசிகர்களிடம் உங்கள் முகத்தைக் காட்டாமல் புறக்கணித்து வருவதுடன், கமெண்ட்ஸ் செக்சனையும் முடக்கியுள்ளது மிக மோசமான செயல்” என விமர்சித்துள்ளார்.