இளையராஜாவை ஓரம் கட்டிய ஏ.ஆர்.ரகுமான்… ஆணவத்துக்கு விழுந்த அடியா.?

0
Follow on Google News

நாட்டின் 70வது தேசிய திரைப்பட விருதுகள்அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரைப்படங்கள் 6 விருதுகளை வென்றுள்ளன. அதோடு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் ஒரு தேசிய விருதை தட்டி தூக்கியுள்ளார். எனக்கு விருது வாங்குவது எல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி என, இந்த விருதோடு சேர்த்து மொத்தமாக 7 தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறார். 

ஏ.ஆர்.ரகுமான் தேசிய  விருதை வாங்கியதோடு மட்டுமல்லாமல், இசைஞானி இளையராஜாவையே பின்னுக்கு தள்ளி, இசையில் அதிக தேசிய விருது வாங்கிய ஒரே நபர் என்ற சாதனையையும் படைத்திருப்பது தான் தற்போது பேசு பொருளாகியுள்ளது. முதலில் இசை என்றாலே இளையராஜாதான் என்ற நிலை மாறி, தற்போது பல இசையமைப்பாளர்கள் உருவெடுத்தாலும், இளையராஜாவின் இசை என்றாலே தனி சுகம் தான் என அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. 

ஆனால் சமீப காலமாக இசைஞானி இளையராஜா தலைக்கனத்தில் ஆடுகிறார் என பல பேர் அவருக்கு எதிராக திரும்பி விட்டனர். இசையில் எப்போதும் குறை வைக்காத இளையராஜா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்படுகிறார். தொடர்ச்சியாக பாடல் காப்புரிமை என சக கலைஞர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு எதிராகவே இவர் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

இப்படி தன் பாடலை யாரும் பயன்படுத்தக் கூடாது என இளையராஜா போட்ட கண்டிஷனால் ஒரு சில  ரசிகர் கூட்டமும் இளையராஜாவுக்கு எதிராக நின்றது. அப்போதுதான் இளையராஜா தலைகனத்தில் ஆடுகிறார், இவரின் ஆட்டத்தை அடக்க ஒருவர் வருவார் என்றெல்லாம் ரசிகர்கள் டயலாக் பேசிக் கொண்டிருந்தனர், அந்த ஒருவராக தான் தற்போது ஏ.ஆர் ரகுமான் உருவெடுத்து நிற்கிறார். 

சுமார் 1500 படங்களில் இசையமைத்த இளையராஜா இதுவரை ஐந்து தேசிய விருதுகளை தான் வாங்கி இருக்கிறார். ஆனால் இளையராஜாவுக்கும் குறைவான படங்களில் இசையமைத்ந ஏ.ஆர் ரகுமான் ஏழு தேசிய விருதுகள் வாங்கி இளையராஜாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி, முதல் இடத்தை பிடித்துள்ளார். அப்படி தான் தற்போது ஏ.ஆர் ரஹ்மானின் தரமான பின்னணி இசையால்  பொன்னியின் செல்வன் படத்திற்கு, தற்போது தேசிய விருது கிடைத்துள்ளது.

முதலில் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏஆர் ரஹ்மானுக்கு, முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்தது. அப்போது கமலின் தேவர் மகன் பட இசையும் தேசிய விருதுகளுக்கான போட்டியில் முன்னிலையில் இருந்தது. அப்போது இளையராஜாவுக்கு  போட்டியாக ரோஜா படத்தின் இசைக்காக ஏஆர் ரஹ்மான் களத்தில் இருந்தார். இருவருமே சமமான வாக்குகள் வாங்கியதால் யாருக்கு விருது அறிவிப்பது என்பதில் இழுபறி நீடித்துள்ளது. 

அப்போது, ராஜாவுக்கு ஈடு கொடுத்து நம்மூரில் இருந்து ஒரு சின்னப் பையன் வந்திருக்கானே என, தேர்வுக் குழு தலைவருக்காக இருந்த பாலு மகேந்திரா அவரின் வாக்கை, ஏஆர் ரஹ்மானுக்கு செலுத்தியுள்ளார். அப்படியாக தனது முதல் தேசிய விருதை வென்ற இசைப்புயல், தற்போது சர்வதேச அளவில் ஆஸ்கர் மேடை வரை மாஸ் காட்டி வருகிறார். 

ஒருகட்டத்தில் தேசிய விருதுப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் – இளையராஜா இருவருமே தலா 5 விருதுகளுடன் சமனில் இருந்தனர். 2015ம் ஆண்டு வரை இளையராஜா தான் 5 தேசிய விருதுகள் வாங்கி முன்னிலையில் இருந்தார். இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது வென்று ஏஆர் ரஹ்மான் 7, இளையராஜா 5 தேசிய விருதுகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.