கொரோனா காலகட்டத்தில் திரைப்பட சினிமா படப்பிடிப்புகள் முற்றிலும் முடங்கி சினிமா தொழிலாளர்கள் எந்த ஒரு வருமானமும் இல்லாமல் வீட்டிலே முடங்கி இருந்தனர். அப்போது அவர்களுடைய அன்றாட வாழ்வாதார மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் மிகப்பெரிய சிரமத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
அந்த நேரத்தில் இயக்குனர் மணிரத்தினம் கொரோனா காலத்தில் கஷ்டத்தில் இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு, அரிசி, மளிகை பொருட்கள் என கொரோனா தொற்று முடிந்து சினிமா படப்பிடிப்புகள் தொடங்கும் வரை பல கோடி செலவில் உதவி செய்து வந்தது பலருக்கு வெளியில் தெரிவதில்லை. ஆனால் முன்னணி நடிகர்கள் மேடை போட்டுச் செய்யும் சின்ன சின்ன உதவிகள் கூட மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் சினிமா துறையில் மிகப்பெரிய கஷ்டத்தில் இருந்து வரும் லைக் மேன்கள் வாழ்க்கையில் ஏ ஆர் ரகுமான் ஒளியேற்றும் வேலையில் இறங்கியுள்ளார். ரகுமான் சினிமாவில் பாடல் போட்டு சம்பாதிப்பதை விட வெளிநாடுகளில் கச்சேரி நடத்தி சம்பாதிப்பது அதிகம். அந்த வகையில் விரைவில் சென்னையில் மிகப்பெரிய ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி நிகழ்ச்சியை நடத்து இருக்கின்றார்.
அந்த நிகழ்ச்சியில் வருகின்ற மொத்த பணத்தையும் பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் இயக்குனர் செல்வமணி இடம் கொடுத்து லைட் மேன்களுக்கு பணத்தை பிரித்து தர இருக்கிறார் ஏ ஆர் ரகுமான். இதேபோன்று அடுத்தடுத்து பல கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி லைட் மேன்கள் போன்று சினிமா துறையில் இருக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் உதவியை செய்ய இருக்கிறார் ரகுமான் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அறிந்த பல சினிமா துறையினர் இது போன்ற செயல்களில் பல கோடி சம்பளம் வாங்கும் அஜித் விஜய் ரஜினி போன்றவர்களும் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்