பாஜகவில் ஜி.வி. பிரகாஷுக்கு என்ன பதவி தெரியுமா.? அமித்ஷா மனதில் இடம் பிடித்த ஜி.வி. பிரகாஷு..

0
Follow on Google News

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பாஜகவில் இணைய இருப்பதாக தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பின்னனி காரணம் சமீபத்தில் தமிழகம் வந்த அமித்ஷாவை ஜிவி பிரகாஷ் சந்தித்து பேசியது தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜிவி பிரகாஷ் பாஜகவில் இணைய இருப்பது குறித்து வெளியான தகவல் பற்றி விசாரித்ததில் பல விஷயங்கள் வெளியாகி உள்ளது.

பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை குறித்து சினிமா துறையை சார்ந்தவர்களிடம் ஆலோசிப்பதற்காக அமித்ஷா தமிழகம் வந்த போது, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உட்பட சில சினிமா துறையைச் சார்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அதனடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அமித்ஷாவை சந்தித்து பேசினார்கள்.

அப்போது பாஜக பற்றிய அவர்கள் கருத்துக்களை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் திரை உலகை சேர்ந்தவர்கள் தெரிவித்தார், இதில் ஜிவி பிரகாஷ் அமித்ஷாவிடம் பல விஷயங்களை பேசியுள்ளார். குறிப்பாக தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் பாஜக இன்னும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என பல விஷயங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் பேசிய கருத்துக்களை பார்த்து வியப்படைந்த அமித்ஷா, நீங்கள் டெல்லி வந்தால் என் வீட்டுக்கு நீங்கள் வரவேண்டும் என்று அழைப்பும் விடுத்துள்ளார. அந்த வகையில் ஜிவி பிரகாஷின் ஆக்கப்பூர்வமான பேச்சு அமித்ஷாவை மிகப்பெரிய அளவில் கவர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமித்ஷா உடனான ஜிவி பிரகாஷ்ன் முதல் சந்திப்பிலேயே அமித்ஷா மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டார் ஜி வி பிரகாஷ்.

இந்நிலையில் விரைவில் ஜிவி பிரகாஷக்கு பாஜகவில் தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அது கட்சிப் பதவியாக இருக்காது, அரசு சார்ந்த வாரியத்தில் ஒரு முக்கிய பதவி ஜிவி பிரகாஷுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார், அதேபோன்று இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுத்து கௌரவித்தது பாஜக.

அந்த வரிசையில் தற்பொழுது நடிகரும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்க்கு கட்சி ரீதியாக பதவி வழங்காமல், அரசு சார்பாக, குறிப்பாக சினிமா துறை சார்ந்த வாரியத்தில் முக்கிய பதவி ஜிவி பிரகாஷுக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாஜக எம்பி பதவி கொடுத்து கௌரவித்த பின்பு அவர் எந்த கருத்து சொன்னாலும் அது குறிப்பிட்ட தரப்பினார் சர்ச்சையாக உருவெடுக்கிறது.

அந்த வகையில் வாரியத்தில் ஜிவி பிரகாஷுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் பொழுது அவரும் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவதர்க்கு வாய்ப்பில்லை, காரணம் ஜிவி பிரகாஷ் அரசியல் சாராமல் தனக்கு கொடுக்க இருக்கும் வாரிய பதவியை சிறப்பாக செயல்படுவார் என்றும் அவரை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் பாஜக தரப்பிலிருந்து ஜி வி பிரகாஷை கௌரவப்படுத்தும் விதமாக வாரியத்தில் முக்கிய பதவி கொடுக்கப்பட்ட பின்பு, அந்த வாரியம் சார்ந்து இயங்கும் போது அவருக்கு பாஜக உடனான நெருக்கம் அதிகரிக்கும் என்றும். அந்த வகையில் தன்னுடைய வாரிய பதவியின் காலம் முடியும் தருவாயில் அவர் பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.