கன்னியாகுமரியில், நிரந்தரமான வேலை எதுவும் இல்லாமல், கிடைத்த வேலைகளை செய்துகொண்டு தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் அருண் விஜய். அதே சமயம் கோபக்காரரான இவர், அடிதடியில் ஈடுபட்டு வருகிறார். அருண்விஜய் அடிதடியில் ஈடுபட்டு வருவதால், அருகில் வசிப்பவர்கள் அவரை ஒரு ஆதவற்றோர் இலத்தில், வேலைக்கு சேர்த்துவிடுகின்றனர்.
காது கேளாத வாய் பேச முடியாத ஆதரவற்றோர் இல்லத்தில் கோட்டி வேலை பார்த்து வருகிறார் அருண் விஜய். அங்குள்ள சிலர், அங்கிருக்கும் கண் தெரியாத பெண்பிள்ளைகள் குளிப்பதை பார்த்துவிட, அவர்களில் இருவரை கொடூரமாக கொன்று காவல்நிலையத்திலும் ஆஜராகி விடுகிறார் அருண் விஜய். அதன் பின்னர் என்ன ஆனது? அவன் என்ன காரணத்திற்காக அந்த கொலையை செய்தான் என்று நீதிமன்றமும், காவல்துறையும் துருவி, துருவி கேட்கிறது.
அதற்கு அருண் விஜய் பதில் சொன்னானா இல்லையா என்பது தான் படத்தின் கதை! இருப்பினும் போலீசார் விசாரிக்கும் போது எதற்காக அந்த கொலையை செய்தேன் என்று சொல்ல மறுக்கிறார் அருண் விஜய். இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் வணங்கான் படத்தின் கதை. வழக்கம் போல, பாலாவுக்கான வன்முறை படம் முழுக்க பரவிக்கிடக்கிறது.
அவ்வபோது வந்து விழும் அவரிக்கே உரித்தான ராவான கவுண்டர்கள் தியேட்டரை சிரிக்க வைக்கிறது; ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமான மொழியில் நடிக்க வைத்திருப்பது கவனம் ஈர்த்து இருக்கிறது நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் ரிதா,படம் நெடுக கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கும் பரிதாப கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.ஏன் இப்படிச் செஞ்சே? என்று அண்ணனிடம் கதறும்போதும் கடைசிக் காட்சியிலும் நம்மையும் கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார்.
நீதிபதியாக நடித்திருக்கும் மிஷ்கின்,காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி ஆகியோர் சிறப்பு.நீதிபதிகள் எப்படி நீதி வழங்கவேண்டும்? காவல்துறை அதிகாரிகள் எப்படி விசாரணை நடத்த வேண்டும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும் வேடங்களில் நன்றாக நடித்து படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் அருண் விஜய் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். அதாவது இயக்குனர் பாலா, எப்படி தன்னுடைய படங்களின் மூலம் ஒவ்வொரு நடிகருக்கும் முகவரியை தந்தாரோ அதேபோல் அருண் விஜயையும் வித்தியாசமான கோணத்தில் காட்டி அவரிடம் உள்ள அசாதாரணமான நடிப்பை வெளிக்கொண்டு வந்துள்ளார்
சூர்யா விலகியதால், இந்த படத்தில் கமிட் ஆன அருண் விஜய், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு, நடிப்பில் வித்தியாசத்தை காட்டியுள்ளார். அருண் விஜய் சினிமா வாழ்க்கையில் வணங்கான் ஒரு முக்கியபடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக அருண் விஜய் வாழ்ந்திருக்கிறார். அவரை போல், ரோஷ்னி பிரகாஷூம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மொத்தத்தில், 6 வருட இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தை கொடுத்துள்ள இயக்குனர் பாலா அதை நேர்த்தியாகும், இன்றைய தினத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாகவும் சொல்லி, வணங்கான் மூலம் கவனம் ஈர்த்துள்ளார் பாலா.