சமீபகாலமாக, மலையாள சினிமாக்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதன் இயல்பான கதைக்களங்களும், வித்தியாசமான முயற்சிகளும் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதுமே விரும்பி கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாள, தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி பான் இந்தியா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
கொடைக்கானல் குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மஞ்சுமல் பாய்ஸ், உலக அளவில் இந்தப்படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, “சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். மஞ்சும்மல் பாய்ஸ் என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.
முதல் விஷயம், மலையாள சினிமாவுக்கு நம்மவர் அளிக்கும் புல்லரிப்பு. குறிப்பாக தமிழ் நாளிதழ் ஓன்று மலையாள சினிமா சார்ந்து 24 மணிநேர புல்லரிப்பு நிலையிலேயே இருக்கிறது. எல்லா படமும் அதன் பார்வையில் கிளாஸிக்தான். அவற்றில் பல படங்கள் பெற்ற அன்னை உட்கார்ந்து பார்க்கமுடியாத சலிப்பூட்டும் போலிப்படைப்புகள்.
கேரளத்திலுள்ள வேறுபாடு என்னவென்றால் கேரளம் போதைவெறியை, அதன் எல்லாக் கீழ்மைகளையும் இயல்பானதாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது. சட்டத்தை மதிக்கும் சாமானியனை மடையனாகவும், உதவாக்கரையாகவும் அது சித்தரிக்கிறது. கேரளக்கடற்கரைகளில் மாலை ஏழு மணிக்குமேல் பெண்கள் மட்டுமல்ல சாமானியர்களான ஆண்கள் கூட செல்லமுடியாது- அதை போலீஸே அறிவுறுத்துகிறது.
கேரள சினிமா தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருப்பதென்றாலே குடித்துச் சண்டைபோட்டு, வம்பிழுத்து, வாந்தி எடுத்து, சாமானியர்களை நிலைகுலையச் செய்து கும்மாளமிடுவது என்றே காட்டி வருகிறது. இவர்கள் எடுக்கும் போதைவெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன் என கடுமையாக விமர்சனம் செய்த ஜெய மோகன்.
மேலும், பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. எந்த பொறுக்கிக் கும்பலுக்கும் அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். குற்றவாளிக் கூட்டங்களுக்குள்ளேயே தியாகவுணர்வு இருக்கும்.இந்தக் கும்பல்களைப் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்தச் சினிமா உருவாக்குமென்றால் நல்லது.
இவர்களை போலீஸ் நேரடியாகவே குற்றவாளிகளாக மட்டுமே நடத்தவேண்டும். ஒருபோதும் ஒருவகையிலும் ஆதரிக்கக் கூடாது என மிக காட்டமாக விமர்சித்த எழுத்தாளர் ஜெகன் மோகன்னுக்கு பதிலடி கொடுத்துள்ள தமிழில் மூடர்கூடம் திரைப்படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் நவீன். ஜெயமோகனுக்கு கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார்.
அதில், தமிழ் பொறுக்கிஸ்’ என்று சொன்ன அந்த சங்கியும், ‘மலையாளப் பொறுக்கிகள்’ என்று சொல்லும் இந்த சங்கியும், ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறந்துள்ளனர்” என்று இயக்குனர் நவீன் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கொடுத்துள்ள பதிலடி குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.