அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்பது போன்று சினிமாத்துறையில் இருப்பவர்களின் வாழ்க்கையும் ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டால் அவர்களின் அட்ராசிட்டிக்கு ஒரு எல்லையே இருக்காது, சினிமாவில் எதாவது ஒரு கேரக்டர் கிடைக்காதா.? நம்ம முகம் ஸ்க்ரீன் ல வராதா.? என வாய்ப்புக்காக அலைந்தவர்கள், ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டால், அதற்கு பிறகு அவர்கள் சொல்வதை இயக்குனர் கேட்க வேண்டும் என்கிற நிலையில் ஓவர் அட்ராசிட்டி செய்து சினிமாவில் காணாமல் போன நடிகர்கள் ஏராளம்.
அதே நேரத்தில் எத்தனை உயரத்துக்கு சென்றாலும் வந்த வழி மறவாமல் இயக்குனர் என்ன செய்கிறாரோ அதை மறுக்கமால் அப்படியே செய்துவிட்டு வந்த விஜய்காந்த் போன்ற நடிகர்கள் சிலரும் இருக்க தான் செய்கிறார்கள், அதனால் தான் அவர்களால் சினிமாவில் நிலைத்து நிற்க முடிகிறது. இந்நிலையில் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன கதையாக அமரனுக்கு முன்பு அமரனுக்கு பின்பு என சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையும், அமரன் வெற்றிக்கு பின்பு யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு உயரத்துக்கு சென்றுள்ளார் சிவகார்த்திகேயன்.
ஒரு ஸ்டாண்ட் ஆப் காமெடியனாக மக்கள் மத்தியில் அறியப்பட்ட சிவகார்த்திகேயன், பல நடிகர்களை பேட்டி எடுத்து, அந்த நடிகர்கள் முன்னாடி மிமிக்கிரி செய்து மகிழ்விப்பது, இப்படி தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து மிக குறுகிய காலத்தில் மிக பெரிய ஹிட் படங்களை கொடுத்தார், குறிப்பாக சிவகார்திகேயன் சினிமா கேரியறில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் மைல் கல் என்றே சொல்லலாம்.
ஆனால் இடையில் ரஜினி முருகன் வெற்றிக்கு பின்பு சிவகார்த்திகேயன் அட்ராசிட்டி எல்லை மீறி சென்றது, தனுடைய நண்பர் RD ராஜா மூலம் தன்னை ஓவர் பில்டப் கொடுக்க சொல்வது, இயக்குனரிடம் கதையில் மாற்றம் கொண்டு வர செய்வது இப்படி சிவகாத்திகேயன் அட்ராசிட்டியால் அவர் நடித்து படங்கள் தோல்வியை சந்தித்தது மட்டுமில்லாமல் சொந்தமாக படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் நஷ்டத்தை சந்தித்து கடனாளியானார் சிவகார்த்திகேயன்.
ஆனால் ஏற்கனவே ஏற்றம் இறக்கங்களை சந்தித்து மீண்டும், கடும் போராட்டத்துக்கு பின்பு அமரன் என்கிற படத்தில் மிக பெரிய ஏற்றத்தை சந்தித்துள்ள சிவகார்த்திகேயன், தற்பொழுது பழைய குருடி கதவை திறடி என்பது போன்று மீண்டும் தன்னுடைய அட்ராசிட்டியை ஆரம்பித்துவிட்டார் என்கிறது சினிமா வட்டாரங்கள், அமரன் படத்தை முடித்துவிட்டு தற்பொழுது மூன்று படத்தில் கமிட்டாகி உள்ளார் சிவகார்த்திகேயன்.
அதில், AR முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் என சிவகாத்திகேயன் நடிக்கும் மூன்று படத்தின் படப்பிடிப்பும் தற்பொழுது நடந்து வருகிறது, இதில் சுதா கொங்கரா இயக்கும் புறநானுறு படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் புறநானுறு படம் 60 கால கட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் கதை என்பதால்,
அந்த கடைக்கு ஏற்ப சுதா கொங்கரா கெட்டப்புக்கு தயாராகி வரும்படி சிவகார்திகேயனிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன், இந்த கெட்டப்பில் என்னால் என்னால் தயாராக முடியாது, ஏற்கனவே AR முருகதாஸ் , சிபி சக்கரவர்த்தி படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன், நீங்கள் சொல்கிற கெட்டப்பில் வந்தால், திரும்ப நான் அந்த படத்திற்கு ஏற்ப கெட்டப் மாற்ற வேண்டும், அதனால், தற்பொழுது நான் இருக்கும் கெட்டப்பில் படப்பிடிப்பை நடத்துங்க என சிவகார்திகேயன் தெரிவிக்க.
செம்ம டென்ஷனில் சுதா கொங்கரா சிவகார்த்திகேயனிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்க்கத்தால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு சமந்தமாகி உள்ளார்கள். இந்நிலையில் இயக்குனர் சொல்வதை கேட்டு சிவகார்த்திகேயன் நடிக்காமல் இப்படி இயக்குனரிடம் சண்டையிடுவது சரியா என உங்கள் கருத்துக்களை கமென்ஸ்ட் செய்யுங்கள்.