நடிகை சித்ரா மரணம் பின்னனியில் தாய் மற்றும் கணவர்.!படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன.? விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

0
Follow on Google News

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது பற்றி பல திடுக்கிடும் தகவல் போலீசார் விசாரணையில் வெளியாகி உள்ளது. சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடிகை சித்ரா மர்மமான முறையில் மரணம் அடைந்தார், இந்த மரணம் தற்கொலை என கூறப்பட்டது, இதனை தொடர்ந்து நடிகை சித்ரா மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர், அதில் உயிரிழந்த சித்ராவுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தவர்கள்.

மேலும் சமீபகாலமாக சித்ரா தொலைபேசி மூலம் யாருடன் அதிகமாக பேசியிருக்கிறார்.மற்றும் படப்பிடிப்பு தளத்தில் சித்ராவுடன் நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் யார் என்று பட்டியலை தயார் செய்தது காவல்துறை. இதனை தொடர்ந்து சித்ராவின் நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வரிடமும்
காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தியது, மேலும் நடிகை சித்ரா உயிரிழந்தது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணங்களிலும் விசாரித்தது காவல்த்துறை.

இந்நிலையில் தற்போது காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது, சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் அவருடைய தாய் மற்றும் கணவர் ஹேம்நாத் கொடுத்த அழுத்தம் தான் என தகவல் வெளியாகி உள்ளது, படப்பிடிப்பு தளத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் ஹேம்நாத் மது போதையில் சென்று நடிகை சித்ராவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, மேலும் கணவர் ஹேம்நாத்தை விட்டு பிரிந்து வருமாறு சித்ராவை அவர் தயார் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் சித்ரா வீட்டு லோன், கார் லோன் என வங்கியில் அதிக கடன் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது, சமீபத்தில் கூட விலை உயர்ந்த ஆடி கார் ஒன்றை நடிகை சித்ரா வாங்கியுள்ளார், சென்னை தி நகரில் உள்ள சித்ராவின் அலுவலக வாடகை மட்டுமே மாதம் ஒரு லட்சம் என கூறப்படுகிறது, ஆனால் சித்ரா அதிக சம்பளம் வாங்கும் நபராக சின்னத்திரையில் வலம் வருவதால் வங்கியில் பெற்ற கடனுக்காக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தாய் மற்றும் கணவர் ஹேம்நாத் இருவரின் தொடர் அழுத்தம் காரணமாக ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, ஆனால் தற்கொலை செய்துகொண்ட சித்ரா கை தொலைபேசியில் இருந்த குறுச்செய்திகள், தொலைபேசி உரையாடல் குறித்த தகவம் மற்றும் வாட்ஸ் ஆப் செய்திகள் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது, இந்நிலையில் சித்ராவின் மரணம் தற்கொலைதான் என மருத்துவர்கள் தெரிவித்தாலும், அவருடைய மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.