வைரமுத்து இப்படி தான் தொடங்குவார்.. அடுத்து என்ன நடக்கும்… மீண்டும் குட்டையை குழப்பிய சின்மயி..

0
Follow on Google News

தமிழ் சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகின்றவர் பின்னணி பாடகி சின்மயி. அதில் அவருக்கு நடந்த ஒரு சம்பவத்தையும் இதற்கு முன்பு வெளியிட்டிருந்தார் சினிமயி, அதில்,சில ஆவணங்களில் கையெழுத்திட நான் வைரமுத்தின் அலுவலகத்தில் இருந்தேன். ஒரு இசைநிகழ்ச்சிக்காக என்று நினைக்கிறேன்…

கதவு திறந்திருந்தது. நான் உள்ளே சென்று கையெழுத்திட்டேன். அவர் தனது மேஜையின் ஒரு புறம் அமர்ந்திருந்தார் நான் மறுபுறம். அவர் தன் முனையில் இருந்து எழுந்து என்னிடம் வந்தார், நானும் மரியாதை நிமித்தமாக எழுந்தேன். அந்த நேரத்தில் அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்… நான் நடுங்க ஆரம்பித்தேன். என்னுடைய செருப்புகளை அங்கேயே விட்டுவிட்டு விரைந்து கீழே ஓடினேன்.

வைரமுத்துவின் மனைவி பொன்மணி மற்றும் என் அம்மாவுடன் கீழே பேசிகொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். கீழே என் அம்மாவும் இருந்தார்கள். நான் வேகமாக கீழே ஓடிச்சென்று “நாம் போகலாம்” என்று அம்மாவிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. பின்பு வைரமுத்து என்னைப் பாலியல் துன்புறுத்தியதை அம்மாவிடம் சொன்னேன். அம்மா என்னிடம் அதைக் கடந்து செல்லச் சொன்னார்.

அதன் பிறகு, ஏதோ குழுவின் ஒரு பகுதியாகப் பாடுவதற்காக வைரமுத்து என்னை ஒன்றிரண்டு முறை அழைத்தார். அப்போதெல்லாம் நான் அவருடைய மனைவி பொன்மணியைக் கண்டுபிடிப்பேன், அவர் பாதுகாப்பான தூரத்தில் இருப்பதை உறுதி செய்துகொள்வேன், அத்துடன் அவருடன் ஒருபோதும் தனியாக இருக்க நேராமல் பார்த்துக்கொண்டேன். ரிக்கார்டிங் செல்லும் போதெல்லாம், இசையமைப்பாளரிடம் அவர் அங்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டேன் என தனக்கு என்ன நடந்தது குறித்து சின்மயி இதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சீரியல் நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அர்ச்சனா சமீபத்தில வைரமுத்துவை சந்தித்தத புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அந்த புகைப்படத்தில் அர்ச்சனா தலையில் கை வைத்து வைரமுத்து ஆசிர்வதிப்பது போன்ற இருந்தது. இந்த புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் அவர்களுடன் கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்தனர்.

நடிகை அர்ச்சனாவின் இந்த புகைப்படத்திற்கு சின்மயி தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தெரிவித்ததாவது, இது போலத்தான் அனைத்தும் ஆரம்பிக்கும். தயவு செய்து கவனமாக இருங்கள். அவரை சந்திக்கையில் யாரையேனும் துணைக்கு வைத்திருங்கள், அவரிடமிருந்து சற்று தள்ளியே இருங்கள் என சின்மயி தெரிவித்துள்ள கருத்து மீண்டும் வைரமுத்து குறித்த குட்டையை குழப்பியுள்ளது குறிப்பிடதக்கது.

அண்ணாமலை மனைவி இவ்வளவு சம்பாரிக்கிறாங்களா… அண்ணாமலை பேச்சு…

FACEBOOK: https://www.facebook.com/dinaseval TWITTER: https://www.twitter.com/dinaseval FAIR USE Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Dinaseval News . விளம்பர தொடர்பிற்கு – [email protected]