இளையராஜா வைரமுத்து விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா” என்று இளையராஜாவை மிக கடுமையாக தாக்கி பேசி இருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய இளையராஜா சகோதரர் கங்கை அமரன், வைரமுத்து இந்த அளவிற்கு உயர்ந்ததுக்கு காரணமே நாங்க போட்ட பிச்சை தான், இல்லை என்றால் அவர் ஒரு ஆளாகவே ஆகி இருக்க மாட்டார் என பேசிய கங்கை அமரன்.
மேலும் ஒரு நிலத்தை கொடுத்து இந்தாப்பா வச்சுக்கோ என இளையராஜா தனது இசையை கொடுக்க, அதில் வந்து அமர்ந்து கொண்டு அந்த நிலம் உருவானது என்னால்தான் என மடத்தனமாக க வைரமுத்து பேசுவதாகவும், அதோடு வைரமுத்து நல்ல பாடலாசிரியர் தான். ஆனால் அவர் நல்ல மனிதர் கிடையாது. அவருக்கு கொஞ்சமும் நன்றி உணர்வு இருந்திருந்தால் இப்படி இளையராஜா பற்றி தப்பாக பேசி இருக்க மாட்டார் என பேசிய கங்கை அமரன்.
மேலும் இளையராஜாவின் “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடலுக்கு டியூன் போட்டு கொடுத்த நிலையில் அதற்கு வரிகளை எழுதிய வைரமுத்துவிற்கு பாடல் வரிகள் நல்லா இருக்கு என சினிமா சான்ஸ் இளையராஜா கொடுக்கவில்லை என்றால் இந்நேரம் வைரமுத்து என்பவர் யார் என்றே பலருக்கும் தெரிந்து இருக்காது. இதற்கு மேல் வைரமுத்து வாய் திறந்தால் அவருக்கு நடப்பதே வேறு” என எச்சரித்த கங்கை அமரன்.
மேலும் இளையராஜாவை பற்றி ஒரு வார்த்தைப் பேசக் கூடாது. அவர் எப்படி அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறாரோ அப்படி நீங்களும் கூட்டம் போடுங்கள்… உங்கள் புத்தகத்தை வாங்கினால் தான் விழாவுக்கு வருவேன் என்று சொல்லுங்கள்… என்னமோ செய்துகொள்ளுங்கள். உங்களை வாழவைத்தவர்கள் பாரதிராஜாவும் இளையராஜாவும் தான். இளையராஜாவின் படத்தை வைத்து நீ தினமும் கும்பிடவேண்டும்” என வைரமுத்துவுக்கு மிக கடுமையாக பதிலடி கொடுத்து இருந்தார் கங்கை அமரன்.
இந்நிலையில் பொது மேடை ஒன்றில் இளையராஜா குறித்து வைரமுத்து பேசிய வீடியோ ஓன்று தற்போது வைரலாகி வருகிறது, அதில். எழுத்தாளர் ஜெயகாந்தன் மகளுக்கு திருமணம் நிகழ வேண்டும் என்று அவர் விரும்பியபோது, எங்கள் மண்டபத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன், மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.
பொன்மணி மண்டபத்தில் வரவேற்பு என பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் அழைப்பு கொடுக்க சென்றிருக்கிறார். அதில் எனக்கும் அவருக்கும் தெரிந்த ஒரு இசையமைப்பாளரிடம் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றிருக்கிறார் ஜெயகாந்தன். அழைப்பிதழை வாங்கிக்கொண்டு அண்ணே அவசியம் வருகிறேன் இது நம்ம வீட்டு கல்யாணம் என அந்த இசையமைப்பாளர் ஜெயகாந்தனிடம் தெரிவிக்கின்றார்.
பின்பு திருமண அழைப்பிதழை பிரித்து உள்ளே பார்க்கிறார் அந்த இசையமைப்பாளர், அதில் மண்டபத்தின் பெயரை பார்க்கின்றார், மன்னிக்க வேண்டும் நான் வரமுடியாது என அந்த இசையமைப்பாளர் தெரிவிக்கின்றார்.அதற்கு வரவில்லை என்றால் போ, என்று சொல்லிவிட்டு கிளம்பிய ஜெயகாந்தன் திரும்பி மீண்டும் அந்த இசை அமைப்பாளரிடம் சென்று, நீதான் திருமணத்திற்கு வரப்போவது கிடையாது உனக்கு எதுக்கு பத்திரிக்கை என பிடிங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
இதை உடன் இருந்து பார்த்தவர்கள் தன்னிடம் சொன்ன தகவல் என பேசிய வைரமுத்து, வராத அவனுக்கு பத்திரிக்கை எதற்கு என்றும், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்ற கண்ணதாசன் வரிகளை வாங்கி ஜெயகாந்தனை நான் பாராட்டி கொண்டேன் என இசைஞானி இளையராஜா பெயரை குறிப்பிடாமல் பொது மேடையியில் வைரமுத்து இதற்கு முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிட்டத்தக்கது.