பிரச்சனை எந்த ரூபத்தில் வரும்னே தெரியல… புலம்பி கொட்டிய விஜய்யை வைத்து லியோ படம் எடுத்த லலித்….

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் இயக்கிய லியோ திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாட நவம்பர் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வெற்றி விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் நடிகர்கள், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் பங்கேற்று மேடையில் பேசினர்.

அப்போது மேடையில் ஏறி பேசிய படத்தின் தயாரிப்பாளர் லலித், லியோ சந்தித்த பிரச்சினைகள் பற்றியும், விஜய் கூறிய வார்த்தைகள் பற்றியும் தெரிவித்துள்ளார். லியோ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்திருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.

விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் லியோ மற்ற ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இருப்பினும், வசூல் ரீதியாக சாதனை படைக்கத் தவறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எப்படியோ படத்தின் ஒட்டு மொத்த வசூல் ஐநூறு கோடியைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், படத்தின் வெற்றி விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பலரும் படத்தின் வெற்றி குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள், படத்திற்கு எப்போ எப்படி பிரச்சினை வருமென்று தெரியவில்லை என்று தான் புலம்பியதாகவும், அதற்கு விஜய் தைரியம் சொல்லி தேற்றியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், லியோக்கு முன்பாக எடுக்கப்பட்ட மாஸ்டர் படத்திற்கு ஓடிடில மிகப்பெரிய ஆஃபர் வந்ததாகவும், ஆனால் விஜய் என் படம் தியேட்டர்லதான் வரணும்’னு சொன்னதாககவும் லலித் குறிப்பிட்டார்.

அதேபோல், இப்போது லியோ படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் எக்கச்சக்க பிரச்சினைகள் வந்தது. இதனால என்ன பண்றதுன்னு தெரியாம திணறிய லலித், “படம் எடுக்குறது ஈசி, ஆனா அதை ரிலீஸ் பண்றது கஷ்டம். பிரச்னை எந்த வடிவுல வரும்னு தெரியாது” என்று புலம்பித் தள்ளியதாகவும், அதற்கு விஜய் எந்தப் பிரச்னை வந்தாலும் நான்கூட இருக்கேன்னு சொல்லியதாகவும் லலித் மேடையில் பேசியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதும் உங்களைவிடவும் நான் 10 மடங்கு வருத்தத்திலிருந்தேன். அன்று இரவே, படத்தின் வெற்றி விழாவை மிகப்பெரியதாக நடத்த முடிவு செய்தேன். ‘படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகு நடத்தலாம், நான் வர்றேன்’ என்று விஜய் அவரிடம் கூறியதாக லலித் தெரிவித்துள்ளார்.