லியோ படத்தின் வெற்றி விழா கொண்ட்டாட்டம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது, நடிகர் விஜய் என்ன பேசப்போகிறார் என பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த நிலையில், விஜய்யின் ஒவ்வொரு பேச்சிலும் அரசியல் கலந்து இருந்ததை பார்க்க முடிந்தது. விஜய்யின் அரசியல் பேச்சு எப்பபோதும் நேரடியாக இருக்காது, யாரை பேசுகிறோம், யாருக்கு பதில் தருகிறோம் என நேரடியாக பேசாமல் மறைமுகமாக தான் விஜய் பேசுவது வழக்கம்.
அதே போன்றே விஜயின் லியோ வெற்றி விழாவில் பேசிய அரசியல் பேச்சு அமைத்திருந்தது, இந்நிலையில் விஜய் அரசியல் மட்டுமின்றி அவருக்கு எதிராக எழுந்த பல சர்ச்சை களுக்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசியிருந்த பேச்சுக்கள், விஜய்க்கு இந்த சமூகத்தின் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைத்திருந்தது அவருடைய பொறுப்பற்ற பேச்சு.
லியோ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள், மற்றும் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் அவரை பின்பற்றும் இளைஞர்கள், குழந்தைகளை சீரழிக்கு வகையில் அமைத்துள்ளது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய், லியோ பாடலில் 2 வரிகள் பிரச்னை. சிகரெட் என ஏன் நினைக்கிறீர்கள். பேனாவாக இருக்கலாம். மதுபானம் என ஏன் நினைக்கிறீர்கள். கூழாக இருக்கலாம். இப்படி எல்லாம் என்னால் சமாளிக்க முடியும். ஆனால் சினிமாவை சினிமாவாக பாருங்கள்.
உலகம் முழுவதும் சினிமா மக்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சம். நல்லவன், கெட்டவன் என வேறுபடுத்தி காட்ட வெவ்வேறு காட்சிகள் வைக்க வேண்டும். எனக்கு கண்டிப்பாக தெரியும் அதை நீங்கள் பின்தொடர மாட்டீர்கள். நம் வாழ்க்கையில் பல்வேறு தீய விசயங்கள் இருக்கிறது. நல்லதை மட்டுமே தேர்வு செய்யுங்கள். பள்ளி கல்லூரி போகும் வழியில் கூட தான் டாஸ்மாக் இருக்கிறது. அங்கு ரவுண்டு அடிச்சிட்டா போறாங்க. கடந்து தானே போகிறார்கள் என விஜய் பொறுப்பற்ற முறையில் பேசியது கடும் சர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பள்ளி மாணவர்கள் மது போதையில் அட்டூழியம், பள்ளி மாணவிகள் சீருடையுடன் மது அருந்தும் காட்சி வைரல் என பல செய்திகள் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பள்ளி கல்லூரி அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் தான் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்கிற அடிப்படையே தெரியாத விஜய்.
பள்ளி, கல்லூரி அருகில் கூட தான் டாஸ்மாக் இருக்கிறது. அங்கு ரவுண்டு அடிச்சிட்டா போறாங்க. கடந்து தானே போகிறார்கள் என பள்ளி மாணவர்கள் இளம் வயதிலே மதுவுக்கு அடிமையாகும் காட்சிகள் பல இடங்களில் நடந்து வருவதை பற்றி சற்றும் சிந்திக்காமல், பொறுப்பே இல்லாமல் தான் செய்த தவறை நியப்படுத்துவதற்காக, இது போன்று விஜய் பேசியுள்ளது அவருக்கு இந்த சமூகத்தில் குறிப்பாக அவரை பின்பற்றும் இளைஞர்கள் மீது துளி அளவும் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது.
பள்ளி கல்லூரி அருகில் இருக்கும் பெட்டி கடைகளில் போதை சாக்லேட் விற்பனை செய்யும் செய்திகள் கூட வெளிவந்து கொண்டிருக்கையில், தமிழகத்தில் என்ன நடக்கிறது என எதுவுமே தெரியாமல், பள்ளி மாணவர்களை சீரழிக்கும் வகையில் படத்தில் நடித்து விட்டு,தான் செய்த தவறை நியப்படுத்தும் வகையில் பேசும் விஜய் அரசியலுக்கு வந்து என்ன கிழிக்க போகிறார் என பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.
மேலும் எதிர்காலத்தில் எங்கு நல்லது நடந்தாலும் அதை நம்ம பசங்க தான் பண்ண வேண்டும் என்று ஆசை என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த விஜய், சீட் மேல் ஏறிகுதித்து தியேட்டரை நாசம் செய்ய கூடாது, என்னுடைய கட் அவுட் பாலாபிஷேகம் செய்யவேண்டாம், ஸ்கூல் – காலேஜ் – வேலைக்கு கட் அடித்துவிட்டு FDFS பார்ப்பது, பெற்றோரின் பணத்தில் 2,000 ரூபாய், 5,000 ரூபாய் என ப்ளாக் டிக்கட் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என விஜய் அட்வைஸ் செய்திருந்தாலே, அவர்கள் எதிர் காலத்தில் நல்ல இடத்திற்கு வந்து விடுவார்கள். ஆகையால் அட்வைஸ் சொல்லும் விஜய் தான் முதலில் அவரை திருந்தி கொள்ள வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது.