கடந்த காலங்களில் நடிகர் விஜய், அவருடைய திரைப்படம் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழாவில், மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து அரசியல் பன்ச் பேசி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர், அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்ற பாஜகவுக்கு எதிரான பன்ச் வசனத்தினால், தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இது மெர்சல் படத்திற்கு விளம்பரமாக அமைந்து அந்த படத்தின் வெற்றிக்கு பாஜகவினரே காரணமாக அமைந்தனர்.
இதனை தொடர்ந்து பாஜகவை சீண்டும் வகையில் விஜயின் நடவடிக்கைகள் தொடர்ந்து இருந்து வந்த காரணத்தில் பாஜக – விஜய் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது, இந்த சூழலில் மாஸ்டர் படப்பிடிப்பு சமயத்தில், விஜய்க்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும்,இந்த சம்பவத்துக்கு பின்பு தன்னை தற்காத்து கொள்ள விஜய் பாஜக குறித்து விமர்சனம் செய்வதை நிறுத்தி கொண்டார் என பரவலாக பேசப்பட்டு வந்தது.
அதற்கேற்றாற் போல் விஜய்க்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு பின்பு பாஜகவை சீண்டுவதை கைவிட்டார் விஜய். இந்த நிலையில் கடந்த 2021 தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்பு, விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரெட் ஜெயன்ட் வெளியிடபட்டதில் சில பிரட்சனை காரணமாக உதயநிதி ஸ்டாலின் மீதி அதிருப்தியில் இருந்த விஜய், அடுத்து தன்னுடைய வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ்க்கு கொடுத்து கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
இதனால் வாரிசு படம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து பின்பு வெளியானது, அதே போன்று சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தையும் ரெட் ஜென்ட்ஸ் கொடுக்கவில்லை விஜய், இந்நிலையில் சமீப காலமாக அரசியல் ரீதியாக விஜய் பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறப்படும் நிலையில் அவர் பாஜக பக்கம் சாய்த்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக நடிகர் விஜய்யை சமீப காலமாகவே பின்னிருந்து இயக்கி வருவது பாஜக தான் என்றும், அந்த வகையில் இதற்கு முன்பு ரஜினியை எப்படி பாஜக பின்னின்று இயக்கியதோ, அதே போன்று தான் விஜய்யை பின்னின்று பாஜக இயக்கி வருகிறது, அந்த வகையில் விஜய்யின் அரசியல் பாஜகவுக்கு பலன் தரும் விதத்தில் தான் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட விஜய், ஆன்மீக சார்ந்த சட்டையும், நெற்றில்யில் குங்குமத்துடன் விஜய் பங்கேற்றுள்ளது, பாஜக உடன் இணைந்து தான் நம்ம அரசியல் என வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த குறியீடு என கூறப்படுகிறது. அதே நேரத்தில் என்னை சீண்டினால் என் பின்னால் பாஜக இருக்கும் என தனக்கு நெருக்கடி கொடுக்கும் அரசியல் கட்சிகளுக்கு உணர்ந்தும் வகையிலும்,
மேலும் பாஜகவுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் வகையில், இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்று தான், ஆன்மீகம் சார்ந்த சட்டை அணிந்தும், குங்குமத்துடன் விஜய் லியோ வெற்றி விழாவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் அரசியல் வருகை குறித்து பாஜக அண்ணாமலை பேசுகையில், விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து தனது சித்தாந்தத்தை நிலைநாட்ட வேண்டும், புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என விஜய் அரசியலை வரவேற்றுள்ளார். இந்நிலையில் விஜய் பாஜக பக்கம் சாய்த்து விட்டார் அவருடைய அரசியல் பாஜக சார்ந்து தான் இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருவது குறிபிடத்தக்கது.