என்ன நடக்குது இங்க.? புஸ்ஸி ஆனந்தை லெப்ட் ரைட் வாங்கிய விஜய்…

0
Follow on Google News

லியோ படத்தின் வெற்றி விழா நேரு விளையாட்டு அரங்கில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது இந்த வெற்றி விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார், என பலரும் எதிர்பார்த்து லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ள பலரும் மிக ஆர்வமுடன் இருந்த நிலையில், இந்த நிகழ்வை நேரடியாக நேரு உள் விளையாட்டு அரங்கில் காண்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

குறிப்பாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், மேலும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் பொழுது ஆதர் அட்டை மற்றும் விஜய் மக்கள் மன்ற உறுப்பினர் அட்டை அவசியம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜய் மக்கள் மன்ற நிர்வாகி தவிர்த்து விஜய் ரசிகர்கள் யாருக்குமே இந்த நிகழ்வில் அனுமதிக்க வில்லை.

விஜய் ரசிகர்கள் ஏன் லியோ வெற்றி விழாவில் அனுமதிக்கவில்லை என்கிற திடுக்கிடும் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாகவே விஜய் சார்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள், அதாவது லியோ படத்தின் டிரைலர் வெளியிடும் திரையரங்குகள் சூறையாடப்படுவது, விஜய் படம் வெளியிடும் திரையரங்கம் முன்பு பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூரை ஏற்படுத்துவது என்று தொடர்ந்து விஜய் ரசிகர்கள் விஜயின் பெயரை எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் டேமேஜ் செய்ய முடியுமா அந்த அளவுக்கு டேமேஜ் செய்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் லியோ படம் வெளியாவதற்கு முன்பு டிரைலரை வெளியிட்ட ஒரு திரையரங்கம் விஜய் ரசிகர்களால் சூறையாடப்பட்டது. இந்த விவகாரம் விஜய்க்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி தந்தது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் செய்து கொண்டே வருகிறார்கள். இந்த நிலையில் லியோ ட்ரெய்லர் வெளியிட்ட திரையரங்கங்கள் சூறையாடப்பட்ட சம்பவம் காலகட்டத்தில் விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் புசி ஆனந்தை மிக கடுமையாக டோஸ் விட்டுள்ளார் விஜய்.

அதாவது மக்கள் மன்ற நிர்வாகிகள் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் எதற்காக நீங்கள் தலைமை பொறுப்பில் இருக்கிறீர்கள், அப்படியானால் உங்கள் கட்டுப்பாட்டில் விஜய் மக்கள் மன்றம் இல்லையா.? என்று மிக கடுமையாக விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்தை டோஸ் விட்டுள்ளார் விஜய். இதனை தொடர்ந்து உடனே மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய புஸ்ஸி ஆனந்த்.

தொடர்ந்து இது போன்று கட்டுப்பாடு இன்றி செயல்பட்டு வந்தால், மக்கள் மத்தியில் நம்ம இயக்கத்திற்கு தளபதிக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படுத்திவிடும். நீங்கள் செய்யும் அட்டூழியத்தால், தளபதிக்கு நான் பதில் சொல்ல முடியவில்லை என புஸ்ஸி ஆனந்த் கேட்டுள்ளார், அதற்கு நிர்வாகிகள். இது போன்று அட்டூழியம் செய்வது விஜய் ரசிகர்கள் தான் , ஆனால் அவர்கள் யாரும் மக்கள் மன்ற உறுப்பினர் கிடையாது.

நம் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்கள் கட்டுக்கோப்பாக தான் இருக்கின்றோம். விஜய் ரசிகர்களாக இருக்கக்கூடியவர்கள் தான் இது போன்ற அட்டூழியங்களை செய்து நாம் இயக்கத்திற்கும் தளபதிக்கும் அவர் பெயர் ஏற்படுத்தித் தருகிறார்கள் என்று தெரிவிக்க. இதே தகவலை விஜய் இடம் தெரிவித்துள்ளார் புஸ்ஸி ஆனந்த் .

இதன் பின்பு தான் லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை, விஜய் மக்கள் மன்ற உறுப்பினராக இருக்கின்றவர்களுக்கு மட்டுமே அதும் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட வேண்டும் என விஜய்யின் உத்தரவின் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் இனி வரும் கலங்களில் இது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கவும் விஜய் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.