இதெல்லாம் ஒரு பொழப்பா… விஜய்க்கு இதெல்லாம் தெரியாமல் நடக்குமா.? என்ன விஜய் இதெல்லாம்…

0
Follow on Google News

மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடியை வசூலித்தது. 12 நாட்கள் முடிவில் ரூ.540 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ், பிக் பாஸ் ஜனனி, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோர் பங்கேறனர்.

பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கின் நடுவே விருந்தினர்கள் நடந்து செல்வதற்காக ராம்ப் அமைக்கப்பட்டு இருந்தது . அதில் விருந்தினர்கள் நடந்து வரும்போதே சூழ்ந்திருந்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். குறிப்பாக, விஜய் கையசைத்து நடந்து வரும்போது மொத்த அரங்கமே கரவொலி எழுப்பியது. விழா தொடங்குவதற்கு முன்னதாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

லியோ வெற்றி விழா தொடங்குவதற்கு முன்பே குவியத் தொடங்கிய ரசிகர்களால் சைடன்ஹாம்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, எந்த கேட்டின் வழியாக செல்வது என தெரியாததால் குழம்பிப் போய் நின்ற ரசிகர்கள், காவல்துறையினர் வேண்டுமென்றே தங்களை அலைக்கழிப்பதாக வேதனையை கொட்டினர் . அனுமதிச் சீட்டுடன் வந்தும் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில், அனுமதி அட்டை இல்லாமல் வெளியே நின்றிருந்த சிலர், உள்ளே இருந்து அவசரமாக வெளியேறிய பெண்களிடம் அனுமதிச் சீட்டுகளை பிடுங்கிய சம்பவமும் நடந்தேறியது. இதனிடையே, அரங்கிற்குள் வாட்டர் கேன், ஸ்னாக்ஸ் அனுமதி இல்லையென்பதால் 6-வது கேட்டின் முன் ரசிகர்கள் தாங்கள் கொண்டுவந்த வாட்டர்கேன்களை வீசியெறிந்து விட்டுச் சென்றனர்.

அதுமட்டுமின்றி விழாவிற்கு வருபவர்கள் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என்றும் விழாவிற்கான பாஸ் இருந்தால் மட்டும் தான் உள்ளே அனுமதிக்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், படம் வெற்றி பெற்றதற்கான ஆதாரத்தையும் கேளுங்கள் என்று கிண்டல் செய்து இருக்கிறார்.

மேலும் ப்ளூ சட்டை மாறன், “படத்தோட டிக்கட்டை ப்ளாக்ல வித்தானுங்க. இப்ப சக்ஸஸ் மீட் டிக்கட்டையும்.. பல ஆயிரத்துக்கு விக்கிறானுங்க போல‌. இதெல்லாம் ஒரு பொழப்பு.” என ட்வீட் செய்து படக்குழுவை கலாய்த்துள்ளார். அதுமட்டுமின்றி படம் ஊத்திக்கிச்சி. அதான் இப்படி கதை விடுறாரு. ஹிட்டாகி இருந்தா மூடிக்கிட்டு இருந்துருப்பாரு. மக்களை ஏமாத்த முடியாது. இந்த பொய்க்கதையை கழுதைப்புலிங்க மட்டும்தான் நம்பும். ஏன்னா… அதைத்தான் ஈசியா ஏமாத்தலாம். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று போட்டாலே கலாய்க்க ஆரம்பித்துள்ள காலத்தில் குடும்பங்கள் கழுவி ஊற்றும் தோல்வி என ப்ளூ சட்டை மாறன் இப்படி ஒரு ட்வீட் போட்டு உள்ளார்.