எனக்கே தெரியாமல் என் இசையை திருடிவிட்டார்கள்… லியோவில் காட்சி மட்டுமில்லை இசையும் திருட்டு தானா.?

0
Follow on Google News

கோலிவுட் மட்டுமின்றி, ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தன் அதிரடி இசையால் இசை ரசிகர்களை துள்ளிக் குதிக்கச் செய்து கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். ஏற்கனவே, ஜெயிலர் படத்தில் அதிரடியான ஆல்பம் கொடுத்து பாராட்டுகளைப் பெற்று வரும் அனிருத், நடிகர் விஜய் நடித்த லியோ படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

மேலும், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களிலும் இசையமைத்துக் கொடுக்கும் பணியில் மிகவும் பிஸியாக இருக்கிறார். ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பின்னணி இசை மற்றும் பாடல்களும் முக்கியம். அப்படி இருக்கையில், அனிருத் இசையில் வெளியாகும் அத்தனை படங்களும் அவரது மியூசிக்கால் வெற்றி பெற்று விடுகிறது.

இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இப்படி தனது இசையால் பட வாய்ப்புகளை மட்டுமில்லாமல் கோடிக்கணக்கான ரசிகர்களையும் தன் பக்கம் கட்டியிழுத்துக் கொண்டிருக்கிறார். லியோ திரைப்படம் வெளியாகிய முதல் நாளிலேயே அதிக வசூலை குவித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவலை வெளியிட்டிருந்தது. ஆனால் லியோ தரப்பில் இருந்து வெளியாகும் வசூல் கணக்கு அணைத்து டுபாக்கூர் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்ந்து நான்காவது நாளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும், இணையவாசிகள் பலர் நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே வாரி இறைத்து வருகின்றனர். ஏற்கனவே, லியோ படம் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்,

படத்தில் வரும் ஆர்டினரி மேன் பாடலின் இசையும் வேறொரு படத்தின் இசையில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பிரச்சினை தலை தூக்கியுள்ளது. லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நான் ரெடி, பேட் ஏஸ், அன்பெனும் ஆயுதம் போன்ற அத்தனை பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனிருத் இசையில், நடிகர் விஜய் மாஸ் ஆக நடனம் ஆட தியேட்டரில் ரசிகர்கள் துள்ளிக் குதித்து பாடலை கொண்டாடினர்.

இப்படி துள்ளலான இசையை கொடுத்த அனிருத் இப்போது ஒரு பிரச்சினையில் சிக்கியிருக்கிறார். ஏற்கனவே, அனிருத்தின் இசையில் ஆங்கிலப் பாடல்களின் சாயல் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் லியோ படத்தின் ஆர்டினரி மேன் பாடலின் தொடக்கம் புகழ்பெற்ற வெப் சீரிஸான பீக்கி ப்ளைண்டர்ஸின் இசையின் சாயலில் இருப்பதாக இணையத்தில் பலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

குற்றச்சாட்டு வைத்தது மட்டுமில்லாமல், பீக்கி ப்ளைண்டர்ஸ் தொடருக்கு இசையமைத்த ஓட்னிகா என்கிற இசையமைப்பாளரையும் டேக் செய்து அனிருத்தை வசமாக மாட்டி விட்டுள்ளனர். இதைப் பார்த்த ஓட்னிகா, இந்தப் பாடலுக்கான உரிமத்தை தன்னிடம் யாரும் கேட்கவில்லை என்றும், தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே பல படங்களில் இருந்து காட்சிகள் காப்பியடிக்கப்பட்டு கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ள லியோ தற்பொழுது, இசையும் திருடப்பட்டுள்ளது பிரச்சினை பூதாகாரமாக வெடித்துள்ளது. மேலும், இசையை காப்பியடித்ததற்காக இசையமைப்பாளர் அனிருத் என்ன பதில் சொல்லப் போகிறார், எதற்கு முன்பு அட்லீ சொன்னது போன்று 7 ஸ்வரங்கள் கதையை சொல்லி உருட்ட போகிறாரா அனிருத் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.