ஓட ஓட விரட்டிய போலீசார்…தலைதெறிக்க ஓடிய விஜய் ரசிகர்கள்..நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன நிலையில், ஏராளமான விஜய் ரசிகர்கள் FDFS காட்சிகளுக்காக திரையரங்குகளில் அலை மோதிக் கொண்டிருக்கின்றனர். முதல் நாள் என்பதால் திரையரங்கு முன்பு குவியும் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் காவல்துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.

இந்த சூழலில்தான் விழுப்புரத்தில் தியேட்டரின் முன் திரண்டு வந்த விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்துள்ளனர். இந்நிகழ்வு சோஷியல் மீடியாக்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புககளைத் தாண்டி, இன்று ரிலீஸ் ஆன லியோ திரைப்படத்திற்கு திரையரங்குகள் முன் கொண்டாட்டமும், சரவெடியுமாய் விஜய் ரசிகர்கள் வெறித்தனம் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே, தமிழக அரசாங்கம் பாதுகாப்பு காரணம் கருதி அதிகாலை ஷோவுக்கு தடை விதித்தது. ஆனால், கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் அதிகாலை ஷோ திரையிடப்பட்டது. இதனால் தமிழ் ரசிகர்கள் பலரும் கடுப்பில் உள்ளனர். அதுமட்டுமின்றி, லியோ படத்தின் டிக்கெட்டுகள் பிளாக்கில் அதிக விலைக்கு விற்கப்படும் நிகழ்வுகளும் செய்திகளில் வெளியாகி வருகின்றன.

இவ்வாறு தொடர்ந்து லியோ படம் திரையிடப்படுவதில் பிரச்சினைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் ரசிகர்கள் மற்றொரு பிரச்சினையை உருவாக்கியுள்ளனர். ஆம், லியோ படத்தின் முதல் காட்சியை காண்பதற்காக விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள கல்யாண் தியேட்டரில், விஜய் ரசிகர்கள் நேற்று இரவு 7:00 மணிக்கு, ரசிகர் ஷோ டிக்கெட்டை வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளனர்.

தியேட்டர் முன் திரண்ட கட்டுக்கடங்காத கூட்டம் ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில் ரசிகர் ஷோ டிக்கெட் வாங்க முயற்சிக்கவே, ரசிகர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தியேட்டர் நிர்வாகம் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட கலவரம் குறித்து காவல்துறைக்கு தகவல் குடுக்கவே, அதிகாரிகள் விரைந்தனர்.

இரசிகர்களிடையே நடந்த மோதலை தடுத்து நிறுத்தி, டி.எஸ்.பி., சுரேஷ், மேற்கு இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சென்று, தகராறு செய்த ரசிகர் மன்றத்தினரை, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது, ரசிகர் மன்ற நிர்வாகியான மோகன் என்பவரும் அவரது குழுவினரும், ரசிகர் ஷோ டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, பிற நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுக்காமல், கூடுதல் தொகை கேட்டதாக, நகர நிர்வாகி ராஜவேல் உள்ளிட்டோர் புகார் தெரிவித்துள்ளனர்.

அதற்கு மோகன் தரப்பினர், ரசிகர் மன்றத்துக்கே தொடர்பில்லாத சிலர் , மொத்த டிக்கெட்டையும் தியேட்டரில் வாங்கி, கூடுதல் கட்டணம் வசூலிக்க முயன்றதை தடுத்ததாகத் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரில் யார் கூறியது உண்மை என்று தெரியாத நிலையில், இறுதியாக டி.எஸ்.பி., சுரேஷ் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வீண் சண்டை, சச்சரவு, கேஸ் வேண்டாம் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாலும், அங்கிருந்து புறப்பட்ட ராஜவேல் தரப்பினர், இரவு 8:30 மணிக்கு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகம் முன் போராட்டம் நடத்தியுள்ளனர். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கும் நிலையில், வீண் வம்பிழுக்க போலீஸ் வேலையை தொந்தரவு செய்வது நல்லதா என்று, இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், அந்த கூட்டத்தை ஓட ஓட விரட்டியடித்துள்ளனர். இதனால் அங்கிருந்து ரசிகர்கள் தலைதெறிக்க ஓடியதால், சற்று நேரம் அந்த இடமே பரபரப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது.