படத்தில் மட்டுமில்லை… படம் பார்பவர்கள் காதிலும் ரத்தம்… படு கேவலமாக இருக்கும் லியோ படம்…

0
Follow on Google News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்து வசூல் சாதனை படைத்திருந்த தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்தது.மாநகரம் தொடங்கி விக்ரம் வரை மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜுக்கென ஒரு ரசிகர் பட்டாளமே தமிழ் சினிமாவில் உண்டு.

அந்த வகையில் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள லியோ படத்தை திரையரங்குகளுக்கு பார்க்க சென்ற ரசிகர்கள் முதல் பாதியில் ஆரவாரம் செய்து ஓரளவு கொண்டாடினாலும், இரண்டாம் பாதியில் திரையரங்கை விட்டு எப்ப வெளியேறுவோம், விட்டால் போதும் என்கின்ற மனநிலைக்கு தள்ளியுள்ளது லியோ படத்தின் காட்சிகளும் கதையும்.

சுமார் 60 நாளுக்கு மேல் காஷ்மீரில் படப்பிடிப்பு, அதிக குளிர் என ஓவர் பில்டப் கொடுத்த லியோ பட குழுவினர், ஆனால் படத்தில் காஷ்மீரில் செட்டு போட்டு அதிகமாக இன்டோர் காட்சிகளே எடுத்துள்ளதை படம் வெளியான பின்பு தான் தெரியவந்தது, இதற்கு நீங்கள் எதற்காக காஷ்மீர் செல்ல வேண்டும் சென்னையில் ஷெட் போட்டு எடுத்திருக்கலாமே என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் 300 கோடி பட்ஜெட் என லியோ பட குழுவினர் தம்பட்டம் அடித்து வந்த நிலையில், படத்தில் அப்படி என்னதான் 300 கோடிக்கு இருக்கின்றது என்று படம் பார்த்தவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள், மேலும் படத்தில் லாஜிக்கே இல்லாமல் பல சீன்கள் நகர்கிறது. அதில் நடிகர் மிஸ்கின் மற்றும் சாண்டி இவர்கள் இருவரும் யார்.? எங்கிருந்து வருகிறார்கள்.? எதற்காக இவர்கள் வழிப்பறி செய்கிறார்கள்.?

இதில் ஒருவன் ஏன் சைக்கோ மாதிரி இருக்கான், என பல காட்சிகள் எதனால் நடக்கிறது என்கின்ற எந்த ஒரு காரணமே இல்லாமல் காட்சிகளை நகர்கிறது. அதேபோன்று நடிகர் விஜய் மிகப்பெரிய கேங் லீடராக இருந்துள்ளார். ஒரு டயலாக்கில் விஜய் நான் சத்தியமங்கலத்தில் அனாதை இல்லத்தில் வளர்ந்தேன் என தெரிவிக்கிறார். அதன் பின்பு திரிஷாவை பார்த்தேன் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்று விஜய் தெரிவிக்கிறார்.

ஆனால் எதற்காக விஜய் சிம்லாக்கு வந்துள்ளார்.? எதற்காக காபி ஷாப் வைத்துள்ளார் என்கின்ற ஒரு கேள்வி படம் பார்ப்பவர்கள் மத்தியில் எழுகிறத.? இப்படி இந்த படத்தில் பல சீன்கள் லாஜிக்கே இல்லாமல் நகர்கிறது.. படத்தின் ப்ரோமோசனுக்காக படம் வெளியாவதற்கு முன்பு பல பேட்டிகளில் பேசிய லோகேஷ் கனகராஜ் கதை குறித்தும் அந்த படத்தில் இடம்பெற்ற கேரக்டர் குறித்தும் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாகவே கடந்து சென்றார்.

இந்நிலையில் படம் வெளியான பின்பு இந்த படத்தில் கதையே இல்லாம தான் லோகேஷ் கனகராஜ் படத்தை எடுத்து முடித்துள்ளார். அப்படியிருக்கையில் கதை பற்றி என்ன சொல்வர். மேலும் பல கேரக்டர்கள் படத்தில் எதற்கு இருக்கே என்றே தெரியவில்லை, ஆகையால் தான் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு பேட்டியிலும், படத்தின் கதை பற்றியும் கதாபாத்திரம் பற்றியும் படம் வெளியான பின்பும் சொல்ல வில்லை இனிமேலும் சொல்ல மாட்டார், காரணம் கதையே இல்லாமல் தான் இந்த படத்தின் காட்சிகள் நகர்கிறது.

மேலும் படம் வெளியாவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் அளித்த ஒவ்வொரு பேட்டியுமே அவர் முகத்தில் ஒரு பதற்றமும் டென்ஷனும் இருந்ததற்கு முக்கிய காரணம் இந்த படம் வெற்றியடையுமா என்கின்ற சந்தேகம் அவருக்கு இருந்தது தான் என்பது லியோ படம் வெளியான பின்பு புரிகிறது என படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.