நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ, இந்த படம் வெளியாவதற்கு முன்பு படக்குழுவினர் கொடுத்த ஓவர் பில்டப் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பெரும் அளவில் இருந்தது.
அந்த வகையில் லியோ படத்தில் கடைசி பத்து நிமிடங்கள் மிக பிரம்மாண்டமாக இருக்கும், அதை பார்க்கத் தவறி விடாதீர்கள் என்றெல்லாம் லியோ பட குழுவினர் கொடுத்த பில்டப்பை நம்பி எதிர்பார்த்து படம் பார்க்கச் சென்ற சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், கடைசி பத்து நிமிடங்கள் கைனாவை பிடிக்கும் காட்சி தானா.! அட பாவிகளா இந்த காட்சியே இந்த படத்திற்கு தேவையே இல்லையே என்று படம் பார்த்தவர்கள் புலம்பு அளவிற்கு படு மோசமாக இருந்தது லியோ படத்தின் கடைசி நிமிட காட்சிகள்.
மேலும் விஜய் காபி ஷாப் எதற்கு நடத்துகிறார் என்றே தெரியவில்லை, அந்த காபி ஷாப்புக்கு யாரும் வந்து காபி குடித்த மாதிரியே தெரியவில்லை, இது மாதிரி எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் விஜயை மட்டும் வைத்து படம் எடுத்தால் விஜய் ரசிகர்களே எப்படி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது, லியோ படத்தை பார்த்து வந்த விஜய் ரசிகர்களே கொடுக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் சாட்சியாக அமைத்துள்ளது.
இந்நிலையில் லியோ படத்தை ஜெயிலருடன் ஒப்பிடுகையில், ஜெயிலர் படம் ஒரு சாதாரண கதை தான், இருந்தாலும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற சென்டிமென்ட், அந்த கதையின் நகர்வுகள் ரஜினியின் நடிப்பு மற்றும் இந்த படத்தின் வெற்றிக்கு நெல்சன் மட்டும் காரணம் இல்லை, ஜெயிலர் படத்தில் ரஜினியின் அனுபவத்தை வைத்து பல இடங்களில் நெல்சனுக்கு அறிவுரை கூறி சில மாற்றங்களும் செய்துள்ளார் ரஜினிகாந்த் .
ஆனால் லியோ படத்தை பற்றி பேசும்பொழுது முதலில் கதை என்று ஒன்று இருக்க வேண்டும், அது லியோ படத்தில் இல்லை, அதாவது பார்த்திபன் என்கின்ற ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், ஒரு கும்பல் வந்து நீதான் லியோ ஒத்துக்கொள் என்று மிரட்டுகிறார்கள், ஆனால் நான் லியோ இல்லை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார் பார்த்திபன், இந்நிலையில் இவர் லியோவா.? பார்த்திபனா? என்கின்ற குழப்பத்துடன் படத்தின் கதையை கடைசிவரையும் நகர்த்தி இருந்தால் இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கும்.
ஆனால் பார்த்திபனும் அவர் தான் லியோவும் அவர்தான் என எளிதாக படம் பார்க்கும் ரசிகர்கள் கண்டு பிடிக்கும் வகையில் 15 நிமிடங்களில் முடிய வேண்டிய ஒரு கதையை ஜவ்வாக இழுத்து வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ், இதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ்யிடம் சரக்கு தீர்ந்து விட்டதே என்று சொல்லலாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான விக்ரம், மாஸ்டர் போன்ற படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரத்திற்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கதைகள் நகரும், மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி என ஒரு கதை போகும், மாஸ்டர் மகேந்திரனுக்கு என ஒரு கதை போகும், அதேபோன்று விக்ரம் படத்தில் பகத்பாஸிலுக்கு என ஒரு கதை போகும், விஜய் சேதுபதிக்கு என ஒரு கதை போகும்.
இப்படி இயல்பாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு கதைகள் அழகாக நகர்ந்து சுவாரசியமாக செல்லும். ஆனால் லியோ படத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் விஜய் விஜய் விஜய் இருக்கின்றாரே தவிர அந்தப் படத்தில் கதை இல்லை. அந்த வகையில் ஜெயிலருடன் லியோவை ஒப்பிடும்போது ஜெயிலர் படத்தில் கதை இருந்தது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. ஆனால் லியோ படத்தில் கதையும் இல்லை விஜய்க்கான மாஸை மட்டுமே நம்பி இறங்கியுள்ள லியோ படம் நிச்சயம் ஜெயிலர் வசூலை முறியடிக்க முடியாது என்பதே சினிமா விமர்சனகளின் கருத்தாக அமைத்துள்ளது.